கள்ள காதலுக்கு இடையூறு: கிரேக்க தூதுவரைக் கொன்ற மனைவி! Featured

Saturday, 31 December 2016 17:15 Published in உலகம்

பிரேசில்(31 டிச 2016): கள்ள காதலுக்கு இடையூறாக இருந்ததால் பிரேசிலுக்கான கிரேக்க தூதுவர் கிரியகோஸ் அமிரிதிஸ் (59), அவரது மனைவியாலேயே கொலை செய்யப்பட்டுள்ளார்.

கிரியகோஸ் அமிரிதிஸ் பிரேசிலியாவில் உள்ள தூதரக அலுவலக குடியிருப்பில் தனது மனைவி மற்றும் 10 வயது மகளுடன் தங்கியிருந்தார். சில தினங்களுக்கு முன்பு புத்தாண்டை கொண்டாட ரியோ டிஜெனிரோவுக்கு காரில் புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் புறநகரான நோவா இருவாச்சு என்ற இடத்தில் தங்கியிருந்த போது திடீரென மாயமாகி விட்டார்.

காணாமல் போன அவரை பல இடங்களில் காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் ரியோ டி ஜெனீரோ நகரில் ஒரு பாலத்துக்கு கீழ் காருக்குள் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். உடல் கரிக்கட்டை யாக கிடந்தது. தடயவியல் நிபுணர்கள் நடத்திய பரிசோதனையில் கிரேக்க தூதர் கிரியகோஸ் அமிரிதிஸ் எரித்து கொல்லப்பட்டது தெரிய வந்தது.

இதுகுறித்த விசாரணையில் அவரை மனைவி பிரான்கோயிஸ் (40) கொலை செய்தது தெரிய வந்தது. பிரான்கோயிஸுக்கும் பிரேசிலை சேர்ந்த காவல்துறை அதிகாரி செர்ஜியோ மொரைரா (29) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது. அதற்கு இடையூறு ஆக கிரியகோஸ் அமிரிதிஸ் இருந்தார். எனவே மனைவி பிரான்கோயிஸ் தனது காதலர் செர்ஜியோவுடன் இணைந்து அவரை கொலை செய்ததுள்ளார். இதனைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Last modified on Saturday, 31 December 2016 16:48
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.