புது வருஷ கொண்டாட்டத்தில் தாக்குதல்: 35 பேர் பலி! Featured

இஸ்தான்பூல்(01 ஜன 2017): துருக்கியில் புதுவருஷ கொண்டாட்டத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 35 பேர் பலியாகியிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

துருக்கியின் இஸ்தான்பூல் நகரில் உள்ள புகழ்பெற்ற இரவு விடுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 35 பேர் பலியானதாகவும் பலர் காயமடைதுள்ளதாகவும் முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது.

2017 வருடத்தை வரவேற்கும் விதமாக பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.