முஸ்லிம்களும் சீக்கியர்களும் தாடி வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி! Featured

Monday, 02 January 2017 06:19 Published in உலகம்

நியூயார்க்(01 ஜன 2016):அமெரிக்காவின் நியூயார்க் காவல்துறையில் முஸ்லிம்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் தாடி வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கமிஷனர் ஜேம்ஸ் ஓ நீல் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த அனுமதியை வழங்கியிருப்பதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. தற்போது திருத்தம் செய்யப்பட்ட இந்த சட்டத்தில் அதிகாரிகள் மத காரணங்களுக்காக 1.27 சென்டிமீட்டர் நீளத்திற்கு தாடி வைத்துக்கொள்ளலாம். சீக்கிய அதிகாரிகளுக்கு காவல்துறையினரின் தொப்பிக்கு பதிலாக தலைப்பாகை அணியவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல காவல்துறையில் பணியாற்றும் முஸ்லிம் பெண்கள் தலையை மறைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது இது ஏற்கனவே அமுலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Last modified on Monday, 02 January 2017 03:22

Related items

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.