ஆப்கான் நாடாளுமன்றம் அருகே தற்கொலை குண்டு தாக்குதல்! Featured

Tuesday, 10 January 2017 20:55 Published in உலகம்

காபூல்(10 ஜன 2017): ஆப்கானிஸ்தான் காபூல் நகரில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 22 பேர் பலியாகியுள்ளனர். 70 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் நாடாளுமன்றம் அருகே இன்று என்.டி.எஸ் அமைப்பின் ஊழியர்களை ஏற்றிக்கொண்டு சென்ற மினி பேருந்து மீது தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இன்னொரு தற்கொலை குண்டு தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 22 பேர் பலியானதாகவும், 70 பேர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று ஆப்கான அரசு அச்சம் தெரிவித்துள்ளது.

Dozens of people have been killed and scores wounded in twin suicide blasts near Afghanistan's parliament in the capital, Kabul, according to officials, in an attack claimed by the Afghan Taliban.

Last modified on Tuesday, 10 January 2017 21:23
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.