நெகிழ்வான உரையுடன் விடைபெற்றார் ஒபாமா! Featured

சிகாகோ(11 ஜன 2017): நெகிழ்ச்சியான உரையுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா விடைபெற்றார்.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் பதவிக்காலம் முடிகிறது. இந்நிலையில் சிகாகோவில் பொதுமக்களிடம் உரையாற்றியுள்ளார். அப்போது அவர் கூறுகையில், 'நான் அதிபராக பதவியேற்றபோது இருந்ததை விட அமெரிக்கா தற்போது மேலும் வலுவான நாடாக மாறியுள்ளது. அனைவருக்கும் பொருளாதார வாய்ப்பு உள்ளது என்பதை உணராமல் நமது ஜனநாயகம் செயல்பட முடியாது.

இனத்தால் நம் சமூகத்தில் பாகுபாடு இருந்து கொண்டு இருக்கிறது. தீவிரவாதம் நமது பாதுகாப்பை மட்டும் அல்ல ஜனநாயகத்தையும் சோதித்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் எந்த தீவிரவாத அமைப்பும் நம் நாட்டில் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தவில்லை.

கடந்த சில வாரங்களாக எனக்கும், மிஷலுக்கும் வந்து குவியும் வாழ்த்துக்களால் நெகிழ்ச்சி அடைந்துள்ளோம்.' என்றார். ஒபாமாவின் பதவிக் காலம் வரும் 20 ஆம் தேதி நிறைவடைகிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் விரைவில் பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Conceding disappointments during his presidency yet offering vigorous encouragement for the nation's future, Barack Obama issued an emotional defense on Tuesday night of his vision to Americans facing a moment of anxiety and a dramatic change in leadership.