அமெரிக்காவின் முஸ்லிம் பெண் நீதிபதி மர்ம மரணம்! Featured

நியூயார்க்(14 ஏப் 2017): அமெரிக்காவின் முதல் முஸ்லிம் பெண் நீதிபதி இருந்த ஷீலா அப்துல் சலாம் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

நியூயார்க் ட்ரெயில்பேளசிங் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த ஷீலா அப்துஸ் சலாம், கடந்த வாரத்தில் காணாமல் போன நிலையில் அவர் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தார்.

இந்நிலையில் மென்ஹாட்டன் பகுதியின் ஒரு ஆற்றின் கரையில் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து நீதிபதி ஷீலா அப்துல் சலாமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதற்கிடையே ஷீலா அப்துல் சலாம் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ரூபத்தில் மரணமடைந்தாரா என்ற கோனத்தில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

A groundbreaking black jurist who became the first Muslim woman to serve as a US judge was found dead in New York’s Hudson River