ஆண்ட்ராய்டில் இன்ஸ்டாகிராம் ஆஃப்லைன் வசதி அறிமுகம்! Featured

Wednesday, 19 April 2017 20:17 Published in உலகம்

புதுடெல்லி(19 ஏப் 2017): சமூக வலைதளங்களின் வளர்ச்சியின் அடுத்த கட்டமாக இஸ்டாகிராம் செயலியில் ஆஃப்லைன் மோட் வழங்க முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் ஆஃப்லைன் மோட் பயன்படுத்தும் போது ஏற்கனவே டவுன்லோடு செய்யப்பட்ட ஃபீட்களுக்கு கமெண்ட், லைக் மற்றும் போஸ்ட்களை சேவ் செய்து கொள்ள முடியும். மேலும் பயனாளிகளை அன்ஃபாலோவும் செய்ய முடியும் என இன்ஸ்டாகிராம் பொறியாளர் ஹென்றி தெரிவித்துள்ளார்.

ஆஃப்லைன் மோடில் மேற்கொள்ளப்பட்டவை, சாதனம் இண்டர்நெட்டுடன் இணைக்கப்பட்டதும் பின்னணியில் செயல்படுத்தப்படும். மற்ற அம்சங்களை போன்று இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் வசதியும் ஆஃப்லைனில் வழங்கப்படுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. எனினும் இந்த வசதி விரைவில் வழங்கப்படும் என கூறப்படுகின்றது.

இன்ஸ்டாகிராம் செயலியில் வழங்கப்பட்டுள்ள இது போன்ற வசதிகள் சீரற்ற இண்டர்நெட் இணைப்பு கொண்டுள்ள வளர்ந்து வரும் நாடுகளிலும் செயலியின் பயனாளிகளின் எண்ணிக்கையை வெகுவாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Instagram has offline mode for Android devices. The Facebook-owned company has revealed at F8 that most of its Android app's features now work offline.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.