காவல்துறை அதிகாரி சுட்டுக் கொலை: பாரிசில் பரபரப்பு! Featured

Friday, 21 April 2017 03:22 Published in உலகம்

பாரிஸ்(21 ஏப் 2017): பிரான்ஸ் தலைநகர் பாரிசில் காவல்துறை அதிகாரி மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வியாழன் இரவு Franklin Roosevelt subway station அருகே நடந்த இந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இத்தாக்குதலில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஞாயிற்றுக் கிழமை ஜனாதிபதி தேர்தல் முதல் சுற்று நடைபெறவுள்ள நிலையில் பாரிஸில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமையானது நாட்டு மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பாரிஸ் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

A gunman has killed a police officer and seriously wounded two others before being shot dead in an incident on the Champs Elysees shopping district in the French capital, according to Paris police and the interior ministry.

Last modified on Friday, 21 April 2017 03:25
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.