300 பயணிகளுடன் வானில் பறந்த விமானம்: உறங்கிய விமானி! Featured

லாகூர்(08 மே 2017): 300 பயணிகளுடன் பறந்த விமானத்தில் சுமார் இரண்டரை மணிநேரம் சீனியர் விமானி உறங்கிய விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானிலிருந்து லண்டனை நோக்கி கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி PK-785 என்ற விமானம் சென்று கொண்டிருந்தது. அதில் சுமார் 300 பயணிகள் பயணித்துள்ளனர்.

இந்நிலையில் இதனை இயக்கிய சீனியர் விமானி அமீர் அக்தார் ஹாஸ்மி business class கேபினில் சுமார் இரண்டரை மணிநேரம் உறங்கியுள்ளார். ஆனால் இதனை யாரும் கவனிக்கவில்லை.

இதற்கிடையே business class ல் பயணித்த ஒரு பயணி கேப்டன் சீருடையுடன் உறங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தார். உடன் இதுகுறித்து விமான பணியாளர்களிடம் விசாரித்தார். அவர்களும் அவர் விமானி என்பதை உறுதி செய்தனர்.

இச்சம்பவம் குறித்து பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திடம் புகார் அளிக்கப் பட்டதை அடுத்து அவர் மீது விமான நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கிடையே ஹாஷ்மி தான் உறங்கியதை மறுத்துள்ளார். மேலும் இரண்டரை மணிநேரம் எப்படி ஒரு சீனியர் விமானி உறங்குவேன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேவேளை ஹாஷ்மி உறங்கியபோது பயிற்சி விமானி விமானத்தை இயக்கியதாகவும் கூறப்படுகிறது.

A senior pilot of Pakistan’s flag carrier Pakistan International Airlines (PIA) has been taken off duty for allegedly sleeping on a London-bound flight and risking the lives of over 300 passengers