சிறுமியின் ஹிஜாபை கிழித்து சிறுமியை காயப்படுத்திய ஆசிரியை! Featured

வாஷிங்டன்(11 மே 2017): அமெரிக்காவில் ஆசிரியை ஒருவர் எட்டு வயது சிறுமியின் ஹிஜாபை கிழித்து துன்புறுத்தியதோடு அவரை காயப் படுத்திய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் பெனிங்டான் பள்ளியில் பயிலும் எட்டு வயது முஸ்லிம் மாணவியின் ஹிஜாபை கிழித்ததோடு மேலும் சிறுமியை காயப்படுத்தியதாக எழுந்த புகாரை அடுத்து ஆசிரியை ஈதா என்பவர் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கிடையே புகாரை மறுத்துள்ள ஆசிரியை ஈதா, குறிப்பிட்ட சிறுமி ஆசிரியை அமரும் இருக்கையில் அமர்ந்து சுட்டித்தனம் செய்ததாகவும், அவர் அங்கிருந்து நகராததால் அப்புறப்படுத்தும்போது ஹிஜாப் தவறாக கிழிந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் குறிப்பிட்ட ஆசிரியை மீது பெற்றோர்கள் தரப்பிலிருந்து தொடர்ந்து புகார் வந்துள்ளதாக கூறப்ப்படுகிறது. அவர் கோபக்காரர் என்றும், மாணாக்கர்களிடம் அமைதியாக நடந்துகொள்வதில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.

காயமுற்ற மாணவி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப் பட்டார். மேலும் காவல்துறையும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதற்கிடையே பள்ளி செய்தி தொடர்பாளர் மைக்கேல் அசிமான் இதுகுறித்து தெரிவிக்கையில், "ஆசிரியை நடந்துகொண்ட விதம் சரியானதல்ல எனவே பள்ளி நிர்வாகம் ஆசிரியை ஈதா மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக பணி நீக்கம் செய்துள்ளது." என்று தெரிவித்தார்.

In USA School Teacher Edah, 31, demanded that the girl at the Bennington School, Bronx, take off her religious scarf,