ரம்ஜான் நோன்பு புதிய விதிமுறைகளுக்கு பெனாசிர் பூட்டோ மகள் எதிர்ப்பு! Featured

இஸ்லாமாபாத்(14 மே 2017): ரம்ஜான் மாதத்தில் பாகிஸ்தான் அரசு உணவகங்கள் விசயத்தில் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கு பெனாசிர் பூட்டோவின் மகள் பக்தவார் பூட்டோ சர்தாரி எதிப்பு தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ள புதிய மசோதாவின்படி, பகல் நேரத்தில் பொதுவெளியில் வைத்து சாப்பிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறும் ஓட்டல்களுக்கு 500 முதல் 25,000 ரூபாய் வரை அபாராதம் விதிக்கும் வகையில் அந்தச் சட்டத்தில் அம்சங்கள் உள்ளன. இந்த சட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பக்தவார் பூட்டோ சர்தாரி தற்போது கடும் வெப்பம் நிலவுகிறது. நோன்பு கடமையாக்கப்படாத பலர் உள்ளனர். வெப்பப் பக்கவாதம் மற்றும் நீர் வறட்சி உள்ளிட்ட நோய்களால் மக்கள் உயிரிழக்கும் நிலை கூட ஏற்படலாம். எல்லோரும் நோன்பு இருக்கப் போவதில்லை. இங்கு குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் இருக்கின்றனர். எனவே இதுபோன்ற கடும் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே பெனாசிர் பூட்டோ மகளின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Former Pakistan Prime Minister Benazir Bhutto’s daughter Bakhtawar Bhutto-Zardari yesterday lambasted a bill prohibiting eating and drinking in public during the month of Ramzan, terming it a “ridiculous law” which is against Islam.