சிறையிலிருந்து தப்ப முயன்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: 17 பேர் பலி! Featured

பப்புவா நியூ கினியா(15 மே 2017): பப்புவா நியூ கினியா நாட்டில் சிறையிலிருந்து தப்ப முயன்ற கைதிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் பலியாகியுள்ளனர்.

பசிபிக் பெருங்கடலின் தென் மேற்கு பகுதியிலுள்ள சிறிய நாடான பப்புவா நியூ கினியாவின் இரண்டாவது பெரிய நகரமான லே-வில் அமைந்துள்ள சிறைச்சாலையில் வெள்ளிக்கிழமையன்று சிறைச் சாலையின் சுற்றுச்சுவரை உடைத்து கைதிகள் தப்பிக்க முயற்சி செய்தனர்.

அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 கைதிகள் பலியாகினர். தப்பிச் சென்ற கைதிகளில் மூன்று பேர் பிடிப்பட்டனர். மேலும் தப்பிச் சென்ற 57 பேரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருவதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Prison guards have shot dead 17 inmates after a mass breakout at Buimo prison in Papua New Guinea. Three prisoners have been recaptured while 57 others managed to escape and remain at large.