116 பேருடன் மியான்மர் ராணுவ விமானம் மாயம்! Featured

Wednesday, 07 June 2017 22:38 Published in உலகம்

மியான்மர்(07 ஜூன் 2017):மியான்மரில் 116 பேருடன் சென்ற ராணுவ விமானம் இன்று மதியம் திடீரென்று தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமானது.

மியான்மரின் மையக் நகருக்கும் யங்கூன் நகருக்கும் இடையில் 18,000 அடிக்கு மேல் பறந்து கொண்டிருந்தபோது விமானம் காணாமல் போனாதாக கூறப்படுகிறது. விமானத்தை தேடுவதற்கு நான்கு கடற்படைக் கப்பல்கள் மற்றும் இரண்டு விமானங்கள் அனுப்பப்பட்டிருந்தன.

இந்நிலையில் விமானத்தின் பாகங்கள் அந்தமான் கடற்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டவெய் நகரத்தின் மேற்கே சுமார் 20 மைல் தொலைவில் அந்தமான் கடற்பகுதியில் விமானத்தின் பாகங்கள் கிடைத்துள்ளதாம். எனவே விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.

Parts of a Burmese military plane have been found in the sea after it disappeared with more than 100 people on board.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.