லண்டன் குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ: தீயை அணைக்க தீயணைப்பு படையினர் தீவிரம்! Featured

லண்டன்(24 ஜூன் 2017): லண்டனில் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ காரணமாக அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.

மத்திய லண்டனின் லான்கேஸ்டர் வெஸ்ட் எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள கிரென்ஃபெல் டவர் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் பற்றிய தீ மளமளவென கட்டிடம் முழுக்க பரவியதால் குடியிருப்புவாசிகளில் பலர் கட்டிடத்தினுள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

27 மாடி கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தின் தீ விபத்தில் காயமுற்றோருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், கட்டிடத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரிட்டன் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கட்டிடத்தில் தீயை அணைக்கும் பணிகளில் 40 தீயணைப்பு வாகனங்கள், 200-க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்தில் சிக்கிய பலருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் தீ விபத்துக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

அதிகாலையில் ஏற்பட்டுள்ள தீ விபத்தில் மீட்கப்படும் குடியிருப்புவாசிகளுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை தீவிபத்தில் உயிரிழப்பு ஏதும் பதிவு செய்யப்படவில்லை.

London Fire Brigade said on Twitter that 40 fire engines and 200 firefighters were trying to douse the fire at Lancaster West Estate tower block.