லண்டனில் மசூதியிலிருந்து தொழுகை நடந்த்திவிட்டு வந்தவர்கள் மீது வேன் மோதி தாக்குதல்! Featured

Monday, 19 June 2017 13:32 Published in உலகம்

லண்டன்(19 ஜூன் 2017): லண்டனில் மசூதி ஒன்றிலிருந்து தொழுகை நடத்திவிட்டு வந்தவர்கள் மீது வேன் ஒன்று மோதியதில் ஒருவர் பலியாகியுள்ளதாகவும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்தில் அண்மைக்கலாமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் இந்த தாக்குதல்களை நிகழ்த்துகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மீண்டும் வேன் மூலம் மோதி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வடக்கு லண்டனில் உள்ள செவன் சிஸ்டர்ஸ் சாலையில் உள்ள மசூதி ஒன்றில் தொழுகை நடத்தி விட்டு வந்த பொதுமக்கள் மீது வாகன தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. நடைபாதையில் நடந்து சென்ற மக்கள் மீது வேன் ஒன்று மோதியது. இதனால் அலறியடித்துக் கொண்டு பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர். இச்சம்பவத்தால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.

பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் விரைந்து வந்து வேன் ஓட்டி வந்தவரை கைது செய்தனர். ஆனால் அந்த நபர் குறித்து போலீசார் எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை. ஆனால் அந்த வேனை சம்பந்தப்பட்ட நபர் திட்டமிட்டு மசூதி தொழுகை முடிந்து திரும்பியவர்கள் மீது மோதி இருக்கிறார் என பிரிட்டன் முஸ்லிம் கவுன்சில் தலைவர் ஹருன்கான் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே லண்டனில் பாதசாரிகள் மீது வேன் மூலம் நிகழ்த்தப்பட்ட தாக்குதல் பயங்கரவாத தாக்குதலாக இருக்க வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு பிரதமர் தெரசாமே தெரிவித்துள்ளார்.

A vehicle hit pedestrians in north London, one dead and injuring several people, police said Monday, as Muslim leaders said worshippers were mowed down after leaving a mosque.

 

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.