அனைத்து முஸ்லிம்களையும் கொல்வேன்: முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியவன் ஆவேசம்! Featured

Monday, 19 June 2017 15:00 Published in உலகம்

லண்டன்(19 ஜூன் 2017): லண்டன் மசூதியில் தொழுகை நடத்திவிட்டு திரும்பியவர்கள் மீது வேனை ஏற்றி தாக்குதல் நடத்தியவன் அனைத்து முஸ்லிம்களையும் கொல்வேன் என்று ஆவேசமாக தெரிவித்துள்ளான்.

லண்டன்(19 ஜூன் 2017): லண்டனில் மசூதி ஒன்றிலிருந்து தொழுகை நடத்திவிட்டு வந்தவர்கள் மீது வேன் ஒன்று மோதியதில் ஒருவர் பலியாகியுள்ளதாகவும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்தில் அண்மைக்கலாமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் இந்த தாக்குதல்களை நிகழ்த்துகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மீண்டும் வேன் மூலம் மோதி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வடக்கு லண்டனில் உள்ள செவன் சிஸ்டர்ஸ் சாலையில் உள்ள மசூதி ஒன்றில் தொழுகை நடத்தி விட்டு வந்த பொதுமக்கள் மீது வாகன தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. நடைபாதையில் நடந்து சென்ற மக்கள் மீது வேன் ஒன்று மோதியது. இதனால் அலறியடித்துக் கொண்டு பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர். இச்சம்பவத்தால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. .

இந்நிலையில் வேனை ஓட்டியவன் அனைத்து முஸ்லிம்களையும் கொல்வேன். எனக்கு முஸ்லிம்கள் மீது கோபம் உள்ளது. அவர்களை எங்கு பார்த்தாலும் விடமாட்டேன் என்று அவேசமாக கத்தியதாக் சம்பவத்தின்போது அங்கிருந்த அப்துல் ரஹ்மான சாலிஹ் அல்ல் அமோதி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் விரைந்து வந்து வேன் ஓட்டி வந்தவனை கைது செய்தனர். அவன் மீது கொலை வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்கு ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

All the victims of a van attack on worshippers at Finsbury Park Mosque were Muslim which clearly indicates that the attacker had deliberately targeted Muslims. Witness Abdulrahman Saleh Alamoudi told BuzzFeed News that the suspect allegedly screamed: “He (the driver) was screaming… ‘I’m going to kill all Muslims,’ I’m going to kill all Muslims’. He was throwing punches.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.