கிரிக்கெட்டில் இந்தியா தோற்றதால் பங்களாதேஷ் ரசிகர் தற்கொலை! Featured

டாக்கா(19 ஜூன் 2017): ஐசிசி சாம்பியன் போட்டியில் இந்தியா தோற்றதால் அதிர்ச்சியடைந்த வங்கதேச கிரிக்கெட் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில், பாகிஸ்தான் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்நிலையில் வங்க தேசத்தை சேர்ந்த 25 வயதான பித்யூத் என்ற ரசிகர் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை தாங்கிக் கொள்ள் முடியாமல் ரெயிலில் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக வங்கதேச காவல்துறை தெரிவித்துள்ளது.