லைவில் மயங்கி விழுந்த பெண் செய்தியாளர் - நடந்தது என்ன? Featured

லாகூர்(29 ஜூன் 2017): பாகிஸ்தானின் பெண் செய்தியாளர் மயங்கி விழுந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பாகிஸ்தான் டி.வி செய்தியாளர் இர்ஜா கான் கடந்த வருடம் லாகூரில்ட நடந்த பொதுக்கூட்டம் ஒன்றை நேரடி காட்சியின் மூலம் விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுவார். இந்த வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவியதோடு, அவர் இறந்துவிட்டதாகவும் வதந்தி பரவியது.

ஆனால் அவர் மயங்கி விழுந்தது மட்டுமே உண்மை. உடன் சக ஊழியர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது நலமாக உள்ளார். மேலும் இச்சம்பவம் நடந்து 10 மாதங்கள் ஆகிவிட்டன.

ஒரு விசயம் என்ன என்றே தெரியாமல் ஒரு ஆதரமற்ற வீடியோவை வைத்து சமூக வலைதளங்களில் ஏதேதோ கதை அளந்துவிடுவது சமீப காலங்களில் அதிகரித்து வருவதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.