பெண் செய்தியாளரின் வைரல் வீடியோ: செய்தியாளர் இர்ஜா கான் விளக்கம்! Featured

Friday, 30 June 2017 20:58 Published in உலகம்

இஸ்லாமாபாத்(30 ஜூன் 2017): பாகிஸ்தான் செய்தியாளர் இர்ஜா கான் இறந்துவிட்டதாக வந்த வீடியோ வதந்திக்கு அவரே விளக்கம் அளித்துள்ளார்.

பாகிஸ்தான் ARY சேனலில் பணிபுரிபவர் இர்ஜா கான். இவர் செய்தி அளிக்கும்போது திடீரென மயங்கி விழும் வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவியது. மேலும் அவர் மயங்கி விழுந்து இறந்துவிட்டதாகவும் தகவல் பரப்பப்பட்டது.

இந்த நிலையில் அது தவறான செய்தி என்று ஏற்கனவே செய்தி வெளியிட்டோம். இதற்கிடையே செய்தியாளர் இர்ஜா கான் அந்த வீடியோ குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "கடந்த இரு நாள்களுக்கு முன் வைரலாக பரவிய அந்த வீடியோவையும் அதில் நான் இறந்துவிட்டதாக வந்த செய்தியையும் கண்டு அதிர்ச்சியடைந்தேன். முன்னணி ஊடகங்கள் கூட உண்மை தெரியாமல் செய்தி வெளியிட்டுவிட்டன.

இந்த சம்பவம் கடந்த வருடம் (2016 ஆம் ஆண்டு) ஒரு பொதுக்கூட்ட நிகழ்வை படம்பிடித்து செய்தியளிக்க சென்றபோது, உணவு ஒவ்வாமை காரனமாக திடீரென மயங்கி விழுந்தேன். உடன் சக ஊழியர்கள் என்னை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து உடல் நலம் தேறினேன்.

ஆனால் சம்பவம் நடந்து 10 மாதங்கள் கழித்து இந்த வீடியோவை தற்போது யாரோ பரப்பியுள்ளனர். என்று இர்ஜாகான் தெரிவித்துள்ளார்.

 

Last modified on Friday, 30 June 2017 21:18
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.