ஃபேஸ்புக்கின் அடுத்தக்கட்ட முயற்சி வெற்றி! Featured

Sunday, 02 July 2017 17:14 Published in உலகம்

நியூயார்க்(02 ஜூலை 2017):தொலைதூரத்தில் அமைந்துள்ள பகுதிகளுக்கும் இணைய சேவையை அளிப்பதற்காக ஃபேஸ்புக் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தியால் இயங்கக் கூடிய ஆளில்லா விமானத்தின் இரண்டாவது சோதனை ஓட்டம் வெற்றி அடைந்துள்ளது.

'அக்யூலா' என பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்த ஆளில்லா விமானம் அரிசோனாவில் ஒரு மணி நேரம் 46 நிமிடங்கள் பறந்தது.

கடந்த கோடை காலத்தில் இந்த ஆளில்லா விமானத்தின் முதல் சோதனை ஓட்டம் நடைபெற்ற போது, கடுமையான காற்று காரணமாக தானியங்கி ஓட்டுநர் அமைப்பு குழப்பத்திற்கு உள்ளாகி, தரையிறங்கும் போது விபத்திற்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

Facebook has completed a second test of a solar-powered drone designed to bring internet access to remote parts of the world.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.