லண்டனில் மீண்டும் பயங்கர தீவிபத்து! Featured

லண்டன்(10 ஜூலை 2017): லண்டனில் மீண்டும் ஏற்பட்டுள்ள பயங்கர தீ விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லண்டன் நகரில் மிகவும் பிரபலமான கேம்டன் லாக் மார்க்கெட் கட்டத்தில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயானது அதிவேகமாக பரவி வருகிறது. அதேபோல், தீப் பொறிகள் காற்றின் மூலம் அருகில் உள்ள பகுதிகளுக்கு பரவுகிறது.

தீ விபத்து ஏற்பட்டதும் உடனடியாக தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயை அணைக்கும் முயற்சியில் 70-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவக் குழுக்களும் விரைந்து வந்தன.

மார்க்கெட்டில் உள்ள மூன்று மாடிகள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. உயிரிழப்பு குறித்து இதுவரை தகவல் எதுவும் இல்லை.
கட்டத்தில் தீ கொளுந்துவிட்டு எரியும் படங்கள் மளமளவென சமூக வலைதளங்களில் பரவியது.

தீ நீண்ட நேரம் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருப்பதை மக்கள், கட்டடம் வெடித்துவிடும் என்று அச்சத்தில் உள்ளதாக அப்பகுதிவாசி ஒருவர் தெரிவித்தார்.

கேம்டன் லாக் மார்க்கெட் பகுதி அதிக சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

A massive fire broke out in Camden Lock market, popular Tourist destination in north London after Sunday midnight.