பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் பதவி பறிப்பு: உச்ச நீதிமன்றம் அதிரடி! Featured

இஸ்லாமாபாத்(28 ஜூலை 2017): பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிபின் பதவியை தகுதி நீக்கம் செய்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பனாமா பேப்பர்ஸ் ஊழலில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப். அவரது குடும்பத்தினரும் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்த 8 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக்குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது.

இந்த குழு விசாரணையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியாம் ஷெரீப், மருமகன் முகம்மது சப்தார், நவாஸின் சகோதரர் ஹூசை ஷெரீப் ஆகியோர் மீது விசாரணை அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் பரபரப்பான இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அதில் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்ததை அடுத்து நவாஸ் ஷெரிப் பதவி பறிக்கப்படுகிறது.

Pakistani Prime Minister Nawaz Sharif will have to step down as the result of a corruption case, the country's Supreme Court ruled today.