ரோஹிங்கியா விவகாரத்தில் சர்வதேச அழுத்தம் குறித்து கவலையில்லை: ஆங் சான் சூச்சி! Featured

மியான்மர்(19 செப் 2017): ரோஹிங்கிய முஸ்லிம்கள் விவகாரத்தில் மியான்மர் அரசுக்கு உள்ள சர்வதேச அழுத்தம் குறித்து கவலையில்லை என்று மியான்மர் அதிபர் ஆங் சான் சூச்சி தெரிவித்துள்ளார்.

பெளத்த மதம் பெரும்பான்மையாக உள்ள ரகைன் மாகாணத்தில் வாழ்ந்து வரும் ரோஹிஞ்சா இனமக்கள் (பெரும்பாலும் முஸ்லீம்கள்) நீண்ட காலமாக நாட்டில் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

கடந்த மாதத்திலிருந்து ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது மியான்மர் அரசு வன்தாக்குதலை அரங்கேற்றி வருகிறது. இதனால் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லபட்டனர். வீடுகள் தீக்கரையாக்கப்பட்டன. சுமார் 4 லட்சம் அகதிகள் வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

மியான்மரில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்படுவது, "இன அழிப்புக்கான மிகச்சிறந்த எடுத்துக்காட்டு போல இருக்கிறது" என ஐ.நாவின் மனித உரிமை ஆணையர் தெரிவித்திருந்தார்.

ரகைன் மாகாணத்தில் "மோசமான ராணுவ நடவடிக்கையை" முடிவுக்கு கொண்டு வர மியான்மர் அரசிடம் ஐ.நாவின் மனித உரிமை ஆணையர் சையத் ராவுத் அல் ஹுசைன் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் மியான்மர் நாட்டு மக்களுக்கு ஆங் சான் சூச்சி ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்ததாவது:

மியான்மரில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை சமாளிக்க அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. சர்வதேச அழுத்தம் குறித்து கவலயடைய போவதில்லை. ரகைன் மாகானத்தில்

நடந்த மனித உரிமை மீறல்களை நான் கண்டிக்கிறேன். அதேவேளை அங்கு நிலமை சீரடைந்துள்ளது. அங்குள்ள முஸ்லிம்கள் அங்கேயே உள்ளனர். இதனை உலகம் அறிந்துகொள்ள வேண்டும்.

இந்த வார இறுதியில் நடக்கவுள்ள ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் கலந்து கொள்ள தன்னால் பயணிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது"என்று ஆங் சான் சூச்சி தெரிவித்தார்.