என் கணவர் என் கண் முன்னேயே சுட்டுக் கொல்லப்பட்டார்: ரோஹிங்கிய இந்து பெண்ணின் திகில் அனுபவம்! Featured

டாக்கா(20 செப் 2017): ரோஹிங்கியாவிலிருந்து அகதிகளாக வங்கதேசத்தில் நுழையும் பலரில் ஹிந்துக்களும் அடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அது ஆகஸ்ட் 27 ஆம் தேதி அவர்கள் எங்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்கள் கருப்பு சீருடை அணிந்திருந்தனர்.அப்போது கணவர் மிலோன்தார் அருகில் உள்ள பரிக்கா பஜார்ரில் முடிதிருத்தும் கடையில் பணிபுரிகிறார். அங்கு செல்ல தயாராக இருந்த வேளையில் ஒரு கும்பல் எங்கள் வீட்டுக்குள் நுழைந்தனர். அவர்களிடம் துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன.

அப்போது அவர்கள் எங்களை நோக்கி சுடத் தொடங்கினர். மேலும் கத்திகளால் குத்தத் தொடங்கினர். எங்கள் பகுதியில் மட்டும் சுமார் 100 க்கும் அதிகமானோர் அந்த தினத்தில் கொல்லப்பட்டனர். பலரது உடல்களை துண்டு துண்டாக வெட்டினர். இப்போது நினைத்தாலும் என்னால் அந்த சம்பவங்களை மறக்க முடியவில்லை. எனினும் என் முஸ்லிம் நண்பர்கள் உதவியுடன் வங்கதேசத்திற்கு தப்பியோடி வந்துவிட்டேன். " என்று அவரது திகில் அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார் அனிகா தார் என்னும் ரோஹிங்கிய இந்துப் பெண்.

ரோஹிங்கியாவிலிருந்து வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ள அகதிகளில் முஸ்லிம்கள் மட்டுமல்ல கணிசமான ஹிந்துக்களும் உள்ளனர்.

கடந்த வாரம் ரோஹிங்கியாவிலிருந்து வஙகதேசம் வந்த ஹிந்துப் பெண்களில் பலர் கூறுகின்றனர். எங்கள் கணவன்மார்கள் மியான்மர் ராணுவத்தால் கொலை செய்யப்பட்டுள்ளனர். என்கின்றனர்.

கணவன்களை பற்கொடுத்த நிலையில் எங்களை காப்பாற்றிக் கொள்ளவாவது முஸ்லிம் அகதிகளின் உதவியுடன் வங்கதேசம் வந்துள்ளோம் என்கிறார் பிரமிலா ஷீல் என்கிற 25 வயது பெண்.

ரகைனில் ஹிந்துக்கள் கணிசமான அளவில் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் கணக்கீடு சரியாக தெரியவில்லை என்று மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

வங்கதேசத்தில் சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான அகதிகள் தஞ்சமடைந்துள்ளமையும் அவர்களில் பலருக்கு சரியான அளவில் உணவு இடம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.