ரோஹிங்கிய அகதிகளுக்காக துர்கா பூஜையை ரத்து செய்த இந்துக்கள்! Featured

Saturday, 23 September 2017 11:15 Published in உலகம்

டாக்கா(23 செப் 2017): ரோஹிங்கிய அகதிகளின் தேவைக்காக துர்கா பூஜை செலவை வங்க தேச இந்துக்கள் முற்றிலுமாக குறைத்துக் கொண்டுள்ளனர்.

மியான்மர் அரசின் தாக்குதலால் சொந்த வீடுகளி இழந்து, உறவினர்களை இழந்து சுமார் 4 லட்சது 20 ஆயிரம் அகதிகள் வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் வங்கதேசத்தில் இவ்வருடம் துர்கா பூஜைக்காக ஆகும் செலவு முழுவதையும் ரோஹிங்கிய அகதிகளின் உணவு தேவைக்காக செலவிடப்போவதாக துர்கா பூஜை கமிட்டியினர் தெரிவித்துள்ளனர்.

துர்கா பூஜை கமிட்டியின் தலைவர் நாடெங்கும் உள்ள இந்துக்களிடம் இதுகுறித்து கேட்டுக் கொண்டதாகவும் அவர்கள் அனைவரும் துர்கா பூஜையை ரத்து செய்து அதற்கு செலவாகும் தொகையை ரோஹிங்கிய அகதிகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

வங்கதேசத்தில் குடியேறியுள்ள ரோஹிங்கிய முஸ்லிம் அகதிகளுடன் சுமார் 800 இந்துக்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

A heartwarming gesture of Bangladesh Hindus amid the ‘ethnic cleansing’ of Muslims has brought the ray of hope in Rohingya, as they decided to cut the expenses of upcoming Durga Puja.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.