துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் பலி: பயங்கரவாத இயக்கத்திற்கு தொடர்பா? Featured

வாஷிங்டன(03 அக் 2017): அமெரிக்க துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கும் தீவிரவாத இயக்கங்களுக்கும் தொடர்பில்லை என்று அமெரிக்க புலணாய்வு அமைப்பான எப்.பி.ஐ கூறியுள்ளது.

அமெரிக்காவின் நிவேடா மாநிலத்தில் சூதாட்டம், விபசாரம், ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் உள்ளிட்ட கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு பேர்போன லாஸ் வேகாஸ் நகரில் உள்ள கிராமிய திருவிழா மற்றும் சுற்றுலா திடலில் மூன்றுநாள் கிராமிய இசைவிழா நடைபெற்று வந்தது.

இசை விழாவின் மூன்றாவது கடைசிநாளான நேற்றிரவு இசை நிகழ்ச்சியை காண 20 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். அப்போது, அருகாமையில் உள்ள மண்டலே பே என்ற சொகுசு ஓட்டலின் 32-வது மாடியில் நின்றவாறு இசை நிகழ்ச்சி நடைபெற்ற திடலை நோக்கி ஒரு மர்மநபர் சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டான்.

சுமார் பத்து துப்பாக்கிகளை பயன்படுத்தி மாறிமாறி அவன் நடத்திய தாக்குதலில் இசை நிகழ்ச்சியை ஆர்வத்துடன் ரசித்து கொண்டிருந்தவர்களின் உடல்களில் தோட்டாக்கள் துளைத்தன. ரத்தம் வழிந்தவாறு கூச்சலிட்டபடி அவர்கள் மூலைக்கு ஒருவராக ஓடினர்.a