நியூயார்க்கில் பொதுமக்கள் மீது வேண்டுமென்றே லாரி மோதியதில் 8 பேர் பலி! Featured

Wednesday, 01 November 2017 11:22 Published in உலகம்

நியூயார்க்(01 நவ 2017): அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பொதுமக்கள் மீது வேண்டுமென்றே லாரி மோதியதில் 8 பேர் பலியாகியுள்ளனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஹட்சன் ஆறு அமைந்த பகுதியில் சாலை ஒன்றில் லாரி ஒன்று வேகமுடன் வந்தது. அதனை ஓட்டி வந்த ஓட்டுநர் பொதுமக்களின் மீது லாரியை கொண்டு மோதியுள்ளார். இதில் தாக்குதலில் 8 பேர் பலியாகியுள்ளனர்.

அதன்பின்னர் லாரியில் இருந்து கீழே குதித்த ஓட்டுநர் துப்பாக்கியால் போலீசார் மீது சுட முயற்சித்துள்ளார்எனினும், அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் போலீசார் ஒருவருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது.

இது தீவிரவாத தாக்குதலாக இருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதற்கிடையே இந்த தாக்குதலுக்கு இந்திய பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

A rental truck sped for nearly a mile down a popular, bike-only path in lower Manhattan on Tuesday — killing eight people.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.