வாட்ஸ் அப்பை இழுத்து மூடுங்கப்பா - ஆப்கானிஸ்தான் முடிவு! Featured

Saturday, 04 November 2017 22:28 Published in உலகம்

காபூல்(04 நவ 2017): வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் ஆகிய சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்க ஆப்கானிஸ்தான் முடிவு செய்துள்ளது.

ஆஃப்கானிஸ்தானின் தொலைத்தொடர்பு துறையை கட்டுப்படுத்தும் அமைப்பின் அதிகாரிகள், தாங்கள் இவ்வாரத்தின் தொடக்கத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக செல்பேசி சேவை வழங்கும் நிறுவனங்களை குறுஞ்செய்தி செயலிகளை 20 நாட்களுக்கு தடை செய்யுமாறு கேட்டுக் கொண்டதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஷாஜத் ஆரியோபி, தொலைத்தொடர்பு சேவைகள் குறித்து ஏராளமான புகார்கள் வந்ததால் அதிலுள்ள தொழில்நுட்ப பிரச்சனைகளை சரி செய்வதற்காக தற்காலிக தடையை ஏற்படுத்துமாறு சேவை நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு கட்டுப்பாடு அமைப்பு உத்தரவிட்டதாக அவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் ஆஃப்கானிஸ்தானில் உள்ள ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் மற்றும் சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள், அந்நாட்டில் வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராம் ஆகிய குறுஞ்செய்தி சேவைகளை தடை செய்ய திட்டமிட்டுள்ள அரசிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

Afghanistan has ordered the suspension of WhatsApp and Telegram to resolve “technical problems”, officials said on Saturday, sparking outcry among social media users.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.