ஃபேஸ்புக் போலி கணக்குகள் 270 மில்லியன்! Featured

Sunday, 05 November 2017 12:11 Published in உலகம்

நியூயார்க்(05 நவ 2017): உலகின் முன்னணி சமூக ஊடகங்களுள் ஒன்றான பேஸ்புக்கில் உள்ள போலிக் கணக்குகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீட்டுக்கு உதவியதாக பேஸ்புக் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இந்தத் தகவல் மார்க் சக்கர்பெர்க் தலைமையிலான அந்த நிறுவனத்துக்குப் புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் 2.1 பில்லியன் பயனாளர்களைக் கொண்டு இயங்கிவரும் பேஸ்புக் நிறுவனம், மூன்றாவது காலாண்டு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், போலிக் கணக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ள அந்த நிறுவனம், அதைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி பேஸ்புக்கில் 2,700 லட்சம் (270 மில்லியன்) போலிக் கணக்குகள் செயல்படுவதாக அந்த நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.