மியான்மர் ராணுவத்தால் வன்புணர்வு செய்யப்பட்ட ரோஹிங்கிய முஸ்லிம் பெண்களின் துயரம்! Featured

டாக்கா(18 நவ 2017): மியான்மர் ராணுவம் ரோஹிங்கிய முஸ்லிம் பெண்களை வன்புணர்வு செய்ததை ரோஹிங்கிய முஸ்லிம் பெண்கள் உறுதி செய்துள்ளனர்.

மியான்மரின் ரகைன் மாகாணத்தில் உள்ள ரோஹிங்கியா முஸ்லிம் பெண்கள் மற்றும் சிறுமிகள் மியான்மர் ராணுவ படைகளால் பரவலாக பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் உண்மையானது என்று ஆதாரப்பூர்வமாக உறுதி செய்யபட்டுள்ளது

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், மியான்மர் ராணுவம் எங்களை கையை கட்டி மண்டியிட வைத்து துன்புறுத்தினர். பின்பு எங்களை அவர்கள் வன்புணர்வு செய்தனர். அதனை தொடர்ந்து சிலரை கொலையும் செய்தனர். நானும் அப்படித்தான். என் கையில் இருந்த குழந்தையை அவர்கள் பறித்துக் கொண்டனர். அதனை தூக்கி விசி எறிந்து கொலை செய்தனர். பின்பு என் கழுத்தை அறுக்க முற்பட்டனர். அதில் படுகாயத்துடன் உயிர் தப்பி பிழைத்து வந்துள்ளேன்." என்றார்.

மேலும் இதுகுறித்து ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு வங்கதேசத்துக்கு தப்பி வந்த 52 பெண்களிடம் பேசியது. அவர்களில், 18 வயதுக்கும் குறைவான 3 பெண்கள் உள்பட 29 பேர் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டவர்கள்.
ரகைன் மாகாணத்தில் இருந்த ரோஹிஞ்சா பெண்கள் பர்மிய ராணுவத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டபோதும், அதற்கு முன்னதாகவும் அச்சுறுத்தும் வகையிலும் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர். என்பது குறிப்பிடத்தக்கது.