ஐ போன் உபயோகிப்பவர்கள் கவனம்! Featured

Sunday, 19 November 2017 10:00 Published in உலகம்

ஹனேய்(19 நவ 2017): ஐ போன் சார்ஜர் ஷாக் அடித்து சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வியட்நாமின் ஹா தின் மாகாணத்தில் உள்ள ஹுவாங் சோன் மாவட்டத்தை சேர்ந்தவர் லீ தி ஜோவன்(14). அவர் ஐபோன் 6 வைத்திருந்தார். செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு தூங்குவது சிறுமியின் பழக்கம். இந்நிலையில் சிறுமி செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு படுக்கையில் படுத்து தூங்கியுள்ளார்.

தூக்கத்தில் அவரது கை சார்ஜரின் கேபிள் மீது பட்டதில் மின்சாரம் தாக்கியது. படுக்கையில் சுயநினைவின்றி கிடந்த சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிர் இழந்தார்.

பாதுகாப்பானது என அறியப்படும் ஐபோனிலும் ஆபத்து இருப்பதால் ஐபோன் உபயோகிப்பவர்கள் கவனமாக இருக்கவும்.

 

A teenage girl from Vietnam has died after her iPhone charger cable electrocuted her in her sleep.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.