முஸ்லிம் மாணவியின் ஹிஜாபை இழுத்து விட்டு ஆசிரியர் கிண்டல்! Featured

நியூயார்க்(20 நவ 2017): அமெரிக்காவில் மாணவி ஒருவரின் ஹிஜாபை இழுத்து விட்டு ஆசிரியர் ஒருவர் கிண்டல் செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கவின் விர்ஜினியா மாநிலத்தில் உள்ள பிராத்தாக் பள்ளி ஒன்றில் பயிலும் முஸ்லிம் மாணவியின் ஹிஜாபை ஆசிரியர் ஒருவர் இழுத்து விட்டதோடு, உன் கூந்தல் அழகாக உள்ளது என்று கிண்டலாக பேசியுள்ளார். உடன் அங்கிருந்து விலகி சென்ற மாணவி தன் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனை அடுத்து பெற்றோர் பள்ளி முதல்வருக்கும், மசூதி நிர்வாகத்திற்கும் தகவல் கொடுத்ததை அடுத்து பள்ளி முதல்வர் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டதோடு, சம்பந்தப் பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளது.

இதற்கிடையே சம்மந்தப்பட்ட ஆசிரியரியரின் செயல் மிகவும் மோசமானது என்றும் அவர் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

 

 

A Muslim girl student has alleged that her hijab was pulled off by a school teacher in the US