ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை! Featured

சிட்னி(20 நவ 2017): பசிப்பிக் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள நியூ கலிடோனியா தீவில் டடைன் பகுதியில் இன்று காலை சுமார் 7.3 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சில நிமிடங்கள் நீடித்தது. டடைன் பகுதிக்கு 300 கிமீ தொலைவில் சுமார் 82 கிமீ ஆழத்தில் மையம் கொண்டுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்பதால் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

நிலநடுக்கம் ஏற்பட்ட சுமார் 4 மணி நேரத்தில் நியூ கலிடோனியா மற்றும் வனூட்டி கடலில் சுனாமி அலை தாக்கியது. இருப்பினும் இது பெரிய அளவிலான சுனாமி அலையாக உருவாகவில்லை. வழக்கத்தைவிட 1 மீட்டர் அளவுக்கு உயரமாக கடல் அலை எழுந்ததாக தெரியவந்துள்ளது.

நேற்று மாலை இதே பகுதியில் 6.6 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

The powerful force emerged in the Pacific east of New Caledonia and Vanuatu.

The Pacific Tsunami Warning Center said: “Government agencies responsible for threatened coastal areas should take action to inform and instruct any coastal populations populations at risk.