ஆறு முஸ்லிம் நாடுகள் மீதான தடைக்கு அமெரிக்க நீதிமன்றம் அனுமதி! Featured

வாஷிங்டன்(05 டிச 2017): ஆறு முஸ்லிம் நாடுகள் மீதான தடைக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றவுடன் ஈரான்,லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவிற்குள் நுழைய அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து கீழ் நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இவற்றை எதிர்த்து டிரம்ப் அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. கடந்த மாதம் டிரம்ப் அரசின் உத்தரவை அமல்படுத்த அனுமதி அளித்த நீதிமன்றம், இருப்பினும் ஆண்டின் முடிவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் இவ்வழக்கு அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 2 நீதிபதிகள் மட்டுமே அதிபரின் உத்தரவை தடை செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். நீதிபதிகள் ரூத் பேடர் கின்ஸ்பர்க், சோனியா சோடாமயோர் ஆகியோர் டிரம்பின் கொள்கை முடிவை முழு அளவில் செயல்பட அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளனர்.