எமிரேட்ஸ் விமானத்தில் இனி இப்படியும் பயணிக்கலாம்! Featured

Monday, 25 December 2017 15:44 Published in உலகம்

துபை(25 டிச 2017): எமிரேட்ஸ் விமானம் முதல் வகுப்பில் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய 777 விமானத்தில் 40 அடி சதுர வடிவில் மெர்சிடிஸ் பென்ஸ் ஈர்ப்புடன் புதிய வசதியை எமிரேட்ஸ் விமானம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் எந்த வித அசைவுகளும் இன்றி உறங்கிக் கொண்டு செல்லலாம்.

மேலும் விர்டுவல் ஜன்னல் வசதியும் இதில் உள்ளது. விமானத்தின் எந்த வித சத்தமும் இதில் கேட்காது. 32 அங்குலம் கொண்டு எல்.இ.டி டிவியும், சுமார் 2500 தொலைக்காட்சி சேனல் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

கால நிலை, விமானத்தின் வெப்பநிலை, போன்றவற்றை அறிந்துகொள்ளலாம். உயர்தர படுக்கை அறை வசதிகளுடன் இந்த விமானத்தில் பயணம் மேற்கொள்ளலாம் என எமிரேட்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.


Emirates has just completed the first flight of its new 777 equipped with glorious first class suites

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.