சரக்கு கப்பலுடன் எண்ணெய் கப்பல் மோதி விபத்து : 32 பேர் மாயம்! Featured

Sunday, 07 January 2018 23:12 Published in உலகம்

ஷாங்காய்(07 ஜன 2018): சீனாவில் சரக்கு கப்பலுடன் எண்ணெய் கப்பல் மோதி விபத்துக்குள்ளானதில் எண்ணெய் கப்பலில் பணிபுரிந்த 32 பேர் காணாமல் போயுள்ளனர். சீனா கிழக்கு கடற்பரப்பில் சனிக்கிழமை மாலை இந்த விபத்து நடந்துள்ளது.

ஈரானிலிருந்து 136,000 டன் எண்ணெய் சுமந்து சென்ற சான்சி கப்பல் தீப்பிடித்தது. இதில் பணிபுரிந்த 32 பேரை காணவில்லை. அதில் 30 பேர் ஈரானியர்கள் 2 பேர் வங்க தேசத்தினர். சரக்கு கப்பலில் இருந்த 21 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான கப்பல் தொடர்ந்து எரிந்துகொண்டிருப்பதாலும், மோசமான வானிலை காரணமாகவும் மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

 

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.