நாடாளுமன்றத்தில் ஆபாச படம் பார்க்க முயற்சி! Featured

Monday, 08 January 2018 20:49 Published in உலகம்

லண்டன்(08 ஜன 2018): லண்டன் நாடாளுமன்றத்தில் சுமார் 24473 முறை ஆபாச படம் பார்க்க முயன்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வெளிவந்த தகவலின்படி, பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் இலவச 'வைஃபை' இணைப்பு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை பிரதமர் தெரசா மே அமைச்சரவையில் உள்ள எம்.பி.க்கள், அமைச்சர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் உபயோகப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இலவச வைஃபை இணைப்பின் மூலம் கடந்த ஆண்டு 24,473 முறை ஆபாச இணையதளங்களை திறக்க முயற்சித்தவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்த விவரம் தற்போது வெளிவந்துள்ளது. மேலும் நாள்தோறும் இணையதளங்களை பார்க்க முயற்சிப்பவர்களின் 160 முயற்சிகள் முடியடிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.