தேசிய கீதத்தை தவறாகப் பாடி மாட்டிக்கொண்ட அதிபர் ட்ரம்ப்! Featured

Tuesday, 09 January 2018 10:17 Published in உலகம்

நியூயார்க்(09 ஜன 2018): அமெரிக்க தேசிய கீதத்தை தவறாகப் பாடி அனைவரிடமும் வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்.

அமெரிக்காவின் அட்லாண்டாவில் அலபாமா மற்றும் ஜார்ஜியா அணிகளுக்கிடையே கால்பந்துப் போட்டி நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக ட்ரம்ப் கலந்துகொண்டார். மேலும் திடீரென களத்தில் இறங்கி வீரர்களுடன் தேசிய கீதம் பாடும்போது அவரும் கையை நெஞ்சில் வைத்து பாட ஆரம்பித்துவிட்டார்.

இதனை கண்ட மக்கள் ஆச்சர்யத்துடன் வீடியோ எடுத்து பகிர்ந்தனர். ஆனால் தேசிய கீதம் பாடும்போது பாட்டுக்கு சம்மந்தமில்லாமல் வாய்க்கு வாந்ததை உளறியுள்ளார் ட்ரம்ப். இது சமூக வலைதளங்களில் பரவியுள்ளதோடு, பொதுமக்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்டு இருக்கிறார்.

ட்ரம்ப் இந்நிகழ்ச்சிக்கு செல்லும் முன்பு நாட்டையும், நாட்டின் தேசிய கீதத்தையும் அனைவரும் மதிக்க வேண்டும் என்று ட்விட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.