வாட்ஸ் அப் குழுமங்கள் குறித்து வெளியாகியிருக்கும் அதிர்ச்சி தகவல்! Featured

Thursday, 11 January 2018 16:35 Published in உலகம்

சான் பிரான்சிஸ்கோ(11 ஜன 2018): ஹாக்கிங் முறைகள் மூலம் வாட்ஸ் அப் குழுமங்களில் நுழைந்து தகவல்களை திருட வாய்ப்பு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் ஆப் குரூப்களில் யாரை நினைத்தாலும் ஆட் செய்ய முடியாது. அட்மீன் நினைத்தால் மட்டுமே ஒரு நபரை குழுவில் சேர்க்க முடியும். ஆனால் சில ஹாக்கிங் முறைகளை பயன்படுத்தி எளிதாக நாம் நினைக்கும் நபர்களை வாட்ஸ் குழுவில் சேர்க்க முடியும். இது குழுவில் இருப்பவர்களுக்கு தெரியாமல் கூட பார்த்துக் கொள்ளலாம்.

ஜெர்மனியில் இருக்கும் 'ரூர்' பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவர்கள் ஸ்விட்சர்லாந்தில் நடந்த ஆராய்ச்சி கருத்தரங்கம் ஒன்றில் இந்த தகவலை வெளியிட்டு இருக்கிறார்கள். வாட்ஸ் ஆப்பில் இருக்கும் மோசமான பாதுகாப்பு காரணமாக இப்படி செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. மேலும் யாருடைய தொலைபேசி எண்ணையும் இதன் மூலம் திருட முடியும் என்று அந்த ஆராய்ச்சி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை வாட்ஸ் அப் மறுத்துள்ளது. எனினும் அவ்வாறு இருப்பின் அது சரிசெய்யப்படும் என்றும் வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Last modified on Thursday, 11 January 2018 16:38
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.