மாலத்தீவில் அவசர நிலை பிரகடணம் - தலைமை நீதிபதி பதவி பறிப்பு! Featured

மாலி(06 பிப் 2018): மாலத்தீவில் அவசரநிலை பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டு தலைமை நீதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மாலத்தீவில் அதிபராக அப்துல்லா யாமீனுக்கு எதிராக ஆளும் கட்சியை சேர்ந்த 12 எம்.பி.க்கள் போர்க்கொடி உயர்த்தினார்கள். மேலும் அவர்கள் எதிர்க்கட்சிக்கு ஆதரவு அளித்தனர்.

இதையடுத்து ஆட்சி கவிழும் அபாயத்தை தவிர்க்க 12 எம்.பி.க்களை அப்துல்லா யாமீன் தகுதி நீக்கம் செய்தார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட அதிருப்தியாளர்கள், எதிர்க்கட்சியினரை கைது செய்ய உத்தரவிட்டார். இதனிடையே 12 எம்.பி.க்களை தகுதிநீக்கம் செய்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்றும், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை ஏற்க மறுத்த அப்துல்லா யாமீன் மாலத்தீவில் 15 நாட்களுக்கு அவசர நிலை பிரகடன உத்தரவை பிறப்பித்தார். இதனை அவருடைய அரசியல் ஆலோசகர் அஜிமா சுக்கூர் நேற்று அறிவித்தார். இதனால் அங்கு தொடர்ந்து அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், 12 எம்.பிக்களை தகுதி நீக்கம் செய்த உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி அலி ஹமீத் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் முன்னாள் அதிபர் மமூன் அப்துல் கயாமும் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அங்கு மேலும் பதற்றம் நிலவுகிறது.