71 பேருடன் சென்ற பயணிகள் விமானம் விழுந்து நொருங்கியது! Featured

மாஸ்கோ(11 பிப் 2018): ரஷ்யாவில் 71 பேருடன் சென்ற பயணிகள் விமானம் விழுந்து நொருங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரஷியாவில் உள்ள டொமொடெடொவொ விமான நிலையத்தில் இருந்து 65 பயணிகள் மற்றும் 6 விமான குழுவினருடன் புறப்பட்ட விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. மேலும் ரேடாரில் இருந்து விமானம் காணமல் போயுள்ளது.

இந்நிலையில், மாஸ்கோ பகுதியில் உள்ள அர்குனோவோ கிராமத்தில் அந்த விமானம் விழுந்து நொருங்கியதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த விமானத்தில் பயணம் செய்த 71 பேரின் நிலை என்ன என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.


A Russian passenger plane has crashed after leaving Moscow's Domodedovo airport with 71 people on board.