இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: விமர்சனம் செய்தி விமர்சனம் தென் மாவட்டங்களைக் கண்டுகொள்ளாத ரெயில்வே!

தென் மாவட்டங்களைக் கண்டுகொள்ளாத ரெயில்வே!

தென் மாவட்டங்களைக் கண்டுகொள்ளாத ரெயில்வே!தென்னக ரெயில்வே, தென்மாவட்டங்களுக்கு மிகவும் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே ரயில்களை இயக்குகிறது. சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை செல்ல ஒற்றை ரயில் பாதை மட்டுமே உள்ளது.

சென்னையில் இருந்து விழுப்புரம் வரை இரட்டை அகல ரயில்பாதை போடப்பட்டு வருகிறது. ஆனால் பணிகள் மிகவும் மந்தமாக நடந்து வருகின்றன.

தமிழகத்தில் 40 எம்.பிக்கள் இருந்தும், ஒரு போதும் தமிழகத்திற்கு இரட்டை அகல ரயில் பாதை கேட்டு நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியதில்லை. இதற்குக் கட்சி பாகுபாடு மற்றும் மக்கள் மீதான அக்கறையும் இவர்களுக்கு இல்லாதததே காரணமாகும்.

இதற்கிடையே இருக்கும் ரயில் பாதையில் இயங்கக்கூடிய ரயில்களில் அவ்வப்போது கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தென்னக ரெயில்வே நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், தென் மாவட்டத்தில் ஓடும் இரு ரயில்களில் கூடுதலாக இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ஒற்றை ரயில் பாதையில் ஓடும் ரயில்களில் இவ்வாறு கூடுதல் பெட்டிகளை இணைப்பதைவிட, அதிகமாக ரயில்களை இயக்குவதற்கு ரெயில்வே ஆவன செய்யவேண்டும். அத்துடன் இரட்டை விழுப்புரம் வரை போடப்படும் இரட்டை ரயில்பாதையினைக் கன்னியாகுமரி வரை நீட்டுவதற்கும் ரெயில்வே நடவடிக்கைகள் எடுக்கவேண்டுமென்பதே தென் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Comments  

 
0 # rajan 2011-12-23 05:41
You are wrong to say that the MPs are for the causes of the people. MP is a license to loot which the Tamil Nadu MPs are perfectly doing. Who stand first in Spectrum case?
பதில் | Reply with quote | Quote
 
 
0 # rama doss.d 2011-12-23 15:35
railway department southtamilnadukku ethana train vittalum.... koottam irukkathan seyyum...
பதில் | Reply with quote | Quote
 
 
0 # suman 2011-12-24 10:52
I request railway department should operate an additional express from tirunelveli junction to chennai egmore apart from nellai express,and take necessary steps to introduce new trains to mumbai,bangalore,hyderabad from tirunelveli daily.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # younus 2011-12-25 13:24
ramanatha purathil irundu "mugavai" express vida vendum. enendraal ramanatha purathil irundu oru express kooda ithuvarai vidavillai, rameswarathil irundu varum vandiyai thaan nambi irukavendi irukirathu
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Tamilan 2012-02-06 11:20
கன்ய்குமரி முதல் எக்மொர் வரை சதாஇஃப்டி ரைல் வெடவெடும்....
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: