இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: விமர்சனம் அரசியல் விமர்சனம் சசிகலா நீக்கம் ஏன்?

சசிகலா நீக்கம் ஏன்?

சசிகலா நீக்கம் ஏன்?தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியாக அறியப் பட்ட  ஜெயலலிதாவின் நெருங்கியத் தோழியான சசிகலா, அவரது கணவர் நடராஜன், அவரது அண்ணன் திவாகரன், அக்கா வனிதா மணியின் மகன்கள் பாஸ்கரன், டி.டி.வி தினகரன், வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரன், டாக்டர் வெங்கடேஷ், ராவணன், குலோத்துங்கன், ராமச்சந்திரன், ராஜராஜன்  மற்றும் மிடாஸ் மோகன் ஆகிய 12 பேரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்கி அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளார் ஜெயலலிதா. நீக்கப் பட்ட 12 பேருடன் அதிமுகவினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று அதிமுகவினருக்கு எச்சரிக்கையும் விடுக்கப் பட்டுள்ளது.

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்குப் பாதகமாக தீர்ப்பு வந்து ஜெயலலிதா பதவி விலக நேரிட்டால் முதல்வராக சசிகலாவின் கணவர் நடராஜனை நியமிக்கவும் அதற்கு உதவியாக கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை வளைத்து கட்சியைக் கைப்பற்றவும் சசிகலா தரப்பு முயன்று வருவதாகவும் கூறப் படுகிறது. இதன் பின்னணியிலேயே சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.

நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலிலேயே அதிமுக சார்பில் போட்டியிட்ட 160 பேரில் சுமார் பாதி பேர் சசிகலா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. சசிகலாவின் நீக்கத்தை அடுத்து சசிகலா ஆதரவு அமைச்சர்கள் சிலரும் அதிரடியாக நீக்கப் படக் கூடும் என்று தெரிகிறது. அதிரடிக்குப் பெயர் போன ஜெயலலிதா 29 ஆண்டு கால நெருங்கிய தோழி சசிகலாவையே கட்சியில் இருந்து நீக்கியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: