இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: விமர்சனம் உங்கள் பார்வை பத்திரிக்கை சுதந்திரமும் நக்கீரன் தாக்குதலும்!

பத்திரிக்கை சுதந்திரமும் நக்கீரன் தாக்குதலும்!

இன்றைய தலைப்புச் செய்தியாக நக்கீரன் அலுவலகம் தாக்கப்பட்டதை அனைத்து ஊடகங்களும் வெளியிட்டுள்ளன. விசயம் என்னவென்றால் முதல்வர் ஜெயலலிதா, மாட்டுக்கறி உண்பவர் என்ற செய்தியை சற்று விசமத்தனமாக "மாட்டுக்கறி உண்ணும் மாமி" என்று வால்போஸ்டரில் வெளியிட்டிருந்ததால் உணர்ச்சி வசப்பட்ட சிலர் நக்கீரன் அலுவலகத்தின்மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் ஏற்கனவே தன்னை "பாப்பாத்தி" அதாவது பிராமண ஜாதியைச் சார்ந்தவர் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். பெரும்பாலான இக்கால பிராமண ஜாதியினர் (அமெரிக்காவில் KFC, மக்டொனால்ட் விரும்பி சாப்பிடும் பிராமண சாஃப்ட்வேர் இஞ்சினியர்களை அறிவேன் என்பதால் பெரும்பாலான என்பதே சரி) புலால் உணவுகளை உண்ண மாட்டார்கள் என்பது பரவலான புரிதல். இந்நிலையில் நக்கீரன் இதழ் நாகரிகமின்றி தலைப்பிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.

உண்மையான தகவலாகவே இருந்தாலும் சமூக பொறுப்புள்ள ஓர் பத்திரிக்கை அவ்வாறு தலைப்பிட்டிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். எனினும், நமது ஜனநாயகம் எந்தளவுக்குக் கருத்து சுதந்திரத்தை அனுமதிக்கிறதோ அதே அளவுக்கு அதன்பேரில் சொல்லப்படும் அவதூறுகளையும் சட்டரீதியில் எதிர்கொள்ளலாம். மட்டுமின்றி பிரஸ் கவுன்ஸிலிலும் சம்பந்தப்பட்ட பத்திரிக்கை மற்றும் அதன் பொறுப்பாளர்கள்மீது நடவடிக்கை எடுக்கவும் முடியும். இதைவிடுத்து, கல்வீசி தாக்குதல் நடத்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஆளும் கட்சியாக இருக்கும் ஓர் அரசியல் கட்சியின் தொண்டர்கள் எந்தச்சூழலிலும் எல்லைமீறாமல் நடந்து கொள்ளவேண்டும்.

இந்தப் பிரச்சினைகளுக்குக் காரணமான நக்கீரன் பத்திரிக்கையின்மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக கட்சியின் அமைப்புச் செயலர் திரு.பொன்னையன் தெரிவித்துள்ளார். இது ஒரு பக்கமிருக்க, திமுக தலைவர் திரு.கருணாநிதி அவர்கள் நக்கீரன் அலுவலகம் மீதான தாக்குதலைக் கண்டித்துள்ளார். பின்னணியில் அதிமுகவைச் சாடும் வாய்ப்பாகவே கருணாநிதியின் கண்டனத்தைக் கருதப்படுகிறது. ஓரிரு வருடங்களுக்கு முன்பு, தன் வாரிசுகளுக்கிடையே குழப்பம் ஏற்படுத்தும் வகையில் தினகரன் நாளிதழ் கருத்துக்கணிப்பு வெளியிட்டபோது அதன் அலுவலகத்தை அடித்து நொறுக்கியதோடு, மூன்று ஊழியர்கள் கொல்லப்பட்டபோது அப்போதைய முதல்வர் கருணாநிதி எப்படி நடந்துகொண்டார் என்பதையும் நினைவுகூற வேண்டும்.

மாட்டுக்கறி சாப்பிடாத ஒருவரை, மாட்டுக்கறி சமைத்து சாப்பிடுபவர் என்று சொல்வது தாக்குதல் நடத்துமளவுக்குக் கொடுமையான சொற்பிரயோகமல்ல. எனினும், அவ்வாறு திட்டமிட்டே ஒருவரை இழிவு படுத்தும் நோக்கத்தில் செயல்படுவது கண்டனத்திற்குரியது என்பதோடு இதே அளவுகோலைத் தற்போது கண்டிக்கும் திமுக மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகச் சொல்லும் அதிமுக ஆகிய கட்சிகள், முஸ்லிம்களைத் தீவிரவாதிகள் என்று இதே பத்திரிக்கைகள் பக்கம்பக்கமாக அவதூறாக எழுதியபோது அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் வலியை உணரவேண்டும்.

மாட்டுக்கறி சாப்பிடுபவர் என்பதே தாக்குதல் நடத்துமளவு உணர்வுகளைத் தூண்டக்கூடிய சொல்லாடல் எனில், ஒரு சமூகத்தையே குற்றப்பரம்பரையாகச் சித்தரிக்கும் கருத்துப் பிரயோகங்கள் எந்தளவுக்கு அவர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று தற்போது பத்திரிக்கை சுதந்திரம், தாக்குதல் குறித்து பேசுபவர்கள் உணர்ந்து சமூகப்பொறுப்புடன் நடக்க வேண்டும் என்பதே எம்போன்றவர்களின் அவா!

இப்படிக்கு,
'சிறுத்தை' ராஜேந்திரன்
விழுப்புரம்.

 

Comments  

 
+15 # கந்தசாமி 2012-01-08 01:36
சர்குலேசன் குறையும்போதெல்லாம் இதுபோல் சல்சலப்பு ஏற்படுத்துவது நான்காம்தர பத்திரிக்கைகளின் வியாபார தந்திரம். நடுநிலையாக விமர்சனம் செய்துள்ள 'சிறுத்தை' ராஜேந்திரனுக்கு வாழ்த்துக்கள்.
பதில் | Reply with quote | Quote
 
 
+11 # Nazeer Ataullah 2012-01-08 11:12
நடுநிலையாக விமர்சனம் செய்துள்ள 'சிறுத்தை' ராஜேந்திரனுக்கு வாழ்த்துக்கள்.
பதில் | Reply with quote | Quote
 
 
+10 # barari 2012-01-08 11:56
நேர்மையான விமர்சனம்.வாழ்த்துகள் ராஜேந்திரன் அவர்களே
பதில் | Reply with quote | Quote
 
 
+9 # ABDUL 2012-01-08 13:00
நேர்மையான விமர்சனம்.வாழ்த்துகள் ராஜேந்திரன்
பதில் | Reply with quote | Quote
 
 
+8 # Shabeel 2012-01-08 13:11
நடுநிலையாக விமர்சனம் செய்துள்ள 'சிறுத்தை' ராஜேந்திரனுக்கு வாழ்த்துக்கள். - Shabeel (Saudi Arabia)
பதில் | Reply with quote | Quote
 
 
-5 # Nanpanda 2012-01-08 20:48
ela muslamanum thiviravathi ella ana ela kuntuvadikira thiviravathiyum muslaman.
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # zakir 2012-01-09 07:22
muslimgal tivira vadi enru all muslimgal medhu podapadum aavaduru ella aarasila katchigal mownam maga erakinrana. Athe avargal meeto allathu katchimethu aavaduru elutha padattal mattum kothikiralgam, ETHU SINTHIKKA VENDIYAVAI.
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # c,b sarma 2012-01-11 22:19
அய்யா நல்லஞாபம் இஸ்வாமியரைவருத்தப்படுபடியாகபெச ுவதைசொன்னிர்கள் அதே பார்பணகளை சாடுவதை ?
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Surendar 2012-01-11 23:52
Nice comments Mr.Rajendran.. Nakkeran is the worst magazine among others.. vilambarathukaga enna vena poduvanga eppavume ipdi keezhtharamana news dhan andha book la varum.. better ban such magazines..
பதில் | Reply with quote | Quote
 
 
0 # jahabardeen 2012-01-12 10:54
Its true and good report.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # ஆரியன் 2012-01-13 05:43
ஆமாம், ஹிந்துத்துவாக்கள் எல்லாம் குண்டுவைப்பதில்லை; ஆனால், திட்டமிட்டு குண்டுவைத்து விட்டு அதனை முஸ்லிம்கள்மீது போடுபவர்களெல்லாம் ஹிந்துத்துவாக்களாக இருக்கின்றனர்!

உதாரணம்: பிரக்யாசிங் தாகூர், கர்னல் புரோகித்...
பதில் | Reply with quote | Quote
 
 
0 # deen 2012-01-17 00:21
வரவேற்க்கிரேன்
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Kannathasan 2012-01-28 00:02
?!!
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: