இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: விமர்சனம் உங்கள் பார்வை ஒய் திஸ் சினிமாவெறி பிரதமரே?!

ஒய் திஸ் சினிமாவெறி பிரதமரே?!

தனுஷை விருந்துக்கு அழைத்த பிரதமர் - ஒய் திஸ் கொலவெறி - இந்தச்செய்தியை வாசித்ததும் விரக்தியும் எரிச்சலும் ஏற்பட்டது. வேறு என்னங்க! நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் அழுத்திக்கொண்டிருக்கும் போது நமது பிரதமருக்கு இதெல்லாம் தேவையா? என்று கேட்காமல் இருக்க முடியவில்லை. ஏழைசொல்தான் அம்பலம் ஏறாதே!

ஜப்பான் பிரதமர் யோஷிகியோ நோடாவுக்கு டெல்லியிலுள்ள தனது வீட்டில் நமது பிரதமர் இன்று விருந்தளிக்கிறார். இந்த விருந்தளிப்பில் கலந்துகொள்ள நடிகர் தனுஷுக்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. என்ன ஒரு கேவலம் பாருங்கள்!

ஒருநாட்டு பிரதமர் இன்னொரு நாட்டு முக்கிய தலைவர்களுக்கு விருந்தளித்து கவுரவப்படுத்துவது சாதாரணமாக எல்லா நாடுகளிலும் பின்பற்றப்படும் ராஜதந்திர நடைமுறை. இதன்மூலம் இருநாடுகளுக்கிடையேயான நட்புறவு, சுற்றுலா, வர்த்தகம் இவற்றை மேம்படுத்திக் கொள்ள உதவுகிறது. இதை தவறென்று சொல்லவில்லை. ஆனால், இதில் கலந்து கொள்ள சினிமா நடிகருக்கு அதுவும் பெண்களை இழிவுபடுத்தும் பாடலை குடிபோதையுடன் பாடி நடித்திருக்கும் ஓர் நடிகருக்கு கொடுத்திருக்கும் முக்கியத்துவம் அதிர்ச்சியளிக்கிறது.

மற்றநாடுகளைப்போல் அல்லாது இந்தியப் பெண்கள் 'கல்லானாலும் கணவன்' என்று வாழ்நாளைக் கழிப்பவர்கள் என்பதால் உலகளவில் இந்தியப் பெண்மணிகளுக்கு தனிமரியாதை உள்ளது. ஆனால் இந்தப்பாடலின் தொடக்கம் அதை குழிதோண்டிப் புதைப்பதாக உள்ளது. பாடல்வரிகளிலுள்ள கொலவெறி'டி' இல் பெண்களுக்கு எதிரான சொல்லாடலைக் கையாண்டிருப்பதற்கு எதிராக பொதுநல அமைப்புகள் மட்டுமின்றி பெண்களுக்கான நல அமைப்புகள்கூட கண்டனம் தெரிவிக்கவில்லை. பிரதமரே 'கொலவெறி'பிரபலத்தைக் கண்டு பிரமித்துப்போயிருக்கும்போது பாவம் இவர்கள் என்ன செய்வார்கள்?!

சக இந்திய குடிமகன் என்ற முறையிலும் தனுஷின் தனிப்பட்ட திறமைகளுக்கு மதிப்பளித்து பிரதமர் அவருக்கு அழைப்பு விடுத்திருந்தால் வரவேற்றிருக்கலாம். கூடங்குளம் மக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுத்துவரும் திரு.உதயகுமார் அவர்களுக்கோ அல்லது பொதுமக்களின் பிரச்சினைகளுக்காகப் பாடுபட்டுவரும் வேறுயாரையும் கவுரவித்திருந்தால் பிரதமரின்மீதான நன்மதிப்பு உயர்ந்திருக்குமே! தமிழக அரசியலும் சினிமாவும் உடன்பிறவா சகோதரிகள். தமிழக முதல்வர்கள் பலரின் முகவரி கோடம்பாக்கம். இந்தக் கேடுகெட்ட சினிமா மோகம் நமது பிரதமரையும் விட்டுவைக்கவில்லையே என்று நினைத்து வருந்தாமல் இருக்க முடியவில்லை.

வெளிநாட்டு அதிபருக்கு அளிக்கும் மரியாதை விருந்தில் அழைத்து கவுரவிக்கப்படும் அளவுக்கு யாரிந்த தனுஷ்? சமூக பொறுப்புள்ள கருத்துக்கள் என்றைக்காவது இவர் நடித்த படங்களில் இருந்துள்ளதா? பள்ளி மாணவர்களை வழிகெடுக்கும் வகையில்தான் இவரது அறிமுகப் படம் இருந்தது. கூடுதலாக ஆபாசக் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை. அந்தப்படம் கொடுத்த வசூல் காரணமாகவே பலர் அத்தகைய படங்களை எடுக்க ஆரம்பித்தனர். சமூக கருத்துக்களைச் சொல்லிவந்த இயக்குனர் சங்கர்கூட அதே டேஸ்டிலான 'பாய்ஸ்' படத்தை எடுக்க தனுஷின் முதல்படத்திற்குக் கிடைத்த வரவேற்பும் காரணமாக இருந்தது. அவரது திருமணம் மற்றும் அந்தரந்த வாழ்க்கையை நாகரிகம் கருதி இங்கு குறிப்பிடவில்லை.

பல்வேறு வகையிலும் எதிர்மறையான பிம்பமாகக் காட்சியளிக்கும் நடிகர் தனுஷை பிரதமருடன் விருந்துக்கு அழைத்த 'சினிமாவெறி' ஆலோசகரை களை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் இன்று பெண்களுக்கு எதிரான கொலைவெறி பாடலை பாடியவரை விருந்துக்கு அழைத்து கவுரவிக்கும் பிரதமர் அலுவலகம் நாளை, உண்மையான கொலைவெறியனுக்கும் அழைப்பு விடுக்கும்!.

ஆதங்கத்துடன்
பானுமதி, சென்னை-21.

Comments  

 
+8 # குமரகுரு 2011-12-28 20:30
சவுக்கடி, அப்படியே பிரதமருக்கு அனுப்பி வைக்கலாம். அவ்வலவு காரமும் நேர்த்தியும்.
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # Babu 2011-12-28 20:48
//'கல்லானாலும் கணவன்' என்று வாழ்நாளைக் கழிப்பவர்கள் என்பதால் உலகளவில் இந்தியப் பெண்மணிகளுக்கு தனிமரியாதை உள்ளது.//

பானுமதி,
மேற்கண்ட வரியை ஒரு பெண்ணாகத் தான் நீங்கள் எழுதினீர்களா?
இந்தப் பெண்ணடிமைத் தனத்தை ஆதரிக்கிறீர்களே... வருத்தமாக உள்ளது.
பிரதமரின் சினிமாவெறியை சாடவந்து கற்காலச் சொல்லாடலை ஞாயப்படுத்தறீங்களேமா :-)(
'கல்லாக' கணவன் இருப்பானேயாகில் தில்லாக அந்த பந்தத்தை அறுத்து புதிய வாழ்வை அமைத்துக்கொள்ளும் திராணியே பெண்களுக்கு வேண்டுவது
பதில் | Reply with quote | Quote
 
 
0 # syed iburahim 2011-12-28 23:50
congrats banumathi...According to India I thik you are the only person to show this type of un necessary activities in India...Again thanks to you...இனியாவது திருந்தட்டும் அரசியல்வாதிகள்
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # Naveen 2011-12-29 01:41
hello sister, dont make any issues. it is an honor to actor dhanush by participating in dinner. Dinner la ellam unga rendu PM um pesitu irukka maatanunga. avar thaadi vellai ah irukku, kolambu rusi ah irukku nu thaan pesuvaanga.

Dhanush eh yaen kuptanga na andha japan pm kolaveri paatu ketutu nalla irukku nu comment panni irundhaaru. adhunaala thaan dhanush eh yum dinner la kalandhuka sonnanga.

Go and take the survey report of abortion by teenage girls in mumbai hospitals. appo theriyum inga irukkura kalaachaaram. oru paatu prabalam aaga koodathe, udane kindal pannuveengale. Oru tamilan eh innoru tamilan thaan kavukamudiyum nu u prooved.

Surely japan PM samosa nalla irukku nu thaan solluvaaru valakama. ippa song nalla irukku nu solli irukaaru.

Better luck next time. Keep ur kolaveri with u...
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # cheeeema 2012-01-27 17:33
Good one naveen. As if the other songs in other moves are examples of good tamil. Everybody I think are envy of Dhanush and are passing unnecessary comments. Well said.
பதில் | Reply with quote | Quote
 
 
+3 # M Azhagu 2011-12-29 01:43
எத்தனையோ சாதனையளர்கள் இருக்க - விருந்துக்கு தனுஷையா தேர்ந்தெடுப்பது - குடிகார பாட்டுக்கு பிரதமர் கவுரவித்தால் - நாடு எப்படி முன்னேறும்
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # Naveen 2011-12-29 12:52
avanunga soru thinna neenga yaen sanda potukureenga? sappa matter. it is not round table conference or board meeting. it is just dinner. poi velai eh paarunga...
பதில் | Reply with quote | Quote
 
 
+3 # Sindu 2011-12-29 12:54
Hi Banumathi

Y tis kolaveri on dhanush???? i'm not a fan of dhanush , but proud tat our tamil actor getting recognizance world wide.... First practice to appreciate others work as v r nt doing anything... He is de national award winner last year.. may b tat is also one among de reason to invite for dinner, Cinema people r de entertainers to us so thy called for dinner to entertain...Think positive and proud to b a Indian.... nattula evallvo problems irukum bothu y u hav kolaveri on dhanush???????????????????

Adutha nimisam nichayam illadha valkai, mundicha varaikum ellorayum santhosaha paduthuvom.. :-)
பதில் | Reply with quote | Quote
 
 
0 # vaishnavi 2011-12-29 13:08
super....i never expected this happened...really i feel too much.....
பதில் | Reply with quote | Quote
 
 
+4 # Jarani 2011-12-29 20:10
மாமனார் "நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி" ன்னு டயலாக் விட்டாரு. 
மருமகன்+மகள்+ மாப்பிள்ளை சேர்ந்து டப்பாங்குத்து பாட்டு பாடி ஏதோ தத்துவப்பாடலுக்குரிய பில்டப் கொடுத்து இளைய சமுதாயத்தை கெடுக்குது. 
ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ? 
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # முஸ்லிம் 2011-12-29 20:28
Quoting குமரகுரு:
சவுக்கடி, அப்படியே பிரதமருக்கு அனுப்பி வைக்கலாம். அவ்வலவு காரமும் நேர்த்தியும்.


+1
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # maricar 2011-12-29 22:48
why this cinimaveri
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # karthick 2011-12-30 14:41
Nice line Sindu...
பதில் | Reply with quote | Quote
 
 
-1 # SENTHILKUMAR P 2011-12-30 18:37
very very correct words Banumathi madam, I really proud of your words against this matter..
பதில் | Reply with quote | Quote
 
 
-1 # பானுமதி 2011-12-30 19:09
Mr.Naveen, பிரதமர் நடிகர் தனுஷை விருந்துக்கு அழைத்தது, அவர் தமிழன் என்பதற்காக அல்ல. அதற்காகவேதான் எனில் எத்தனையோ சாதனை தமிழர்கள் உள்ளனர். தனுஷ் கொலவெறி பாடலை பாடியதை நான் சாதனையாக கருத வில்லை. பெண்களை இழிவுபடுத்தும் ஓர் பாடலை நமது பிரதமரும் அங்கீகரித்து விட்டாரே என்ற ஆதங்கம்தான் தவிர தனுஷ்மீது காழ்ப்புணர்வெல்லாம் இல்லை.

Mr.Babu,பெண்கள் பொறுமையானவர்கள் என்பதற்கே அந்த பொன்மொழியை குறிப்பிட்டேன். கொடுமைக்கார கணவனிடமிருந்து விவாகரத்து பெறும் பெண்களும் இருக்கவே செய்கிறார்கள்.
பதில் | Reply with quote | Quote
 
 
-1 # mohamed akbarsha 2012-01-01 21:32
ivangalam theirundha mattainga sago.banumathi, innoru visayam namma pengalum ippa mosama dhan poranga
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # AK 2012-01-05 23:48
Naveen,
Sharp comments. I like it.
பதில் | Reply with quote | Quote
 
 
+2 # Karman 2012-01-11 14:59
Quoting Sindu:
Hi Banumathi

Y tis kolaveri on dhanush???? i'm not a fan of dhanush , but proud tat our tamil actor getting recognizance world wide.... First practice to appreciate others work as v r nt doing anything... He is de national award winner last year.. may b tat is also one among de reason to invite for dinner, Cinema people r de entertainers to us so thy called for dinner to entertain...Think positive and proud to b a Indian.... nattula evallvo problems irukum bothu y u hav kolaveri on dhanush???????????????????

Adutha nimisam nichayam illadha valkai, mundicha varaikum ellorayum santhosaha paduthuvom.. :-)


I AGREE WITH SINDHU & NAVEEN. Ders a lot of problem on which v have to concentrate. both d song and dhanush are entertainer. dont expect other things from them. Live life as it is. Dont issue dis as a big problem.
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # பன்னாடை 2012-01-11 21:52
சொந்தமா செய்யக்கூடிய வேலை நம்ப பிரதமருக்கு இந்த மாதிரி வேலை ஒண்ணுதான் ,அதையும் ஏம்பா கெடுக்கறீங்க
பதில் | Reply with quote | Quote
 
 
0 # ஜெ முருகன் 2012-01-13 15:54
பிரமாதம் சகோதரி. நக்கீரர் பாணியில் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று முரசடித்து கூறியிருக்கிறீர்கள். அப்படியே ‘இப்போதைய’ சினிமாவுக்கும் குட்டு வைத்திருக்கிறீர்கள். என் தாய் குலத்திற்கு நன்றி.
பிழையானப் பாடலுக்கு பரிசளிக்கப் படுகிறது என்றால் அப்பாடலில் இருக்கும் தவறான விசயங்களுக்கும் ஆதரவளிப்பது ஆகுமே !
சிறிது ஆங்கிலம் கலந்த தமிழ் பாடல்கள் இனிமேல் முழு நீள ஆங்கிலப் பாடல்களாக மாறி விடுமோ ! உணவு உணர்வு போராட்டம் போயி அற்ப உண்ர்ச்சிகளுக்காக அடிமைப்பட்டு கிடக்கும் காலம் வந்து விடுமோ !
இசைக் கண்ணோட்டத்துடன் இப்பாடலை ரசித்தால் தவறில்லை இப்பாடலில் இருக்கின்ற விசயத்தை எதையும் ஆராய்ந்து பார்க்கிற ‘இப்போதைய’ இளைய சமுதாயம் ஏற்றுக்கொண்டு விடுமோ !
இதுதான் வாழ்க்கை என இளைய சமுதாயம் வழுக்கி விழுந்து விடுமோ !
மூத்தக்குடி நம் தமிழ்க்குடி எந்நேரமும் குடியாகிவிடுமோ !
என்பதுதான் எங்களின் ஆதங்கம்.
ஆகவே இதுபோன்ற பாடல்களை எழுத வேண்டாம்.
பதில் | Reply with quote | Quote
 
 
-1 # ஜெ முருகன் 2012-01-13 16:17
பூவோடு சேர்ந்த நாரும் மணப்பது போல நல்ல செய்திகளோடு கெட்ட விசயங்கள் அதிகம் காட்டப்படுவதால் பலபேர் கெட்டதைகூட நியாயமானதாக கருதுகின்றனர்.
எத்தனையோ பேரை நல்ல வழிக்கு மாற்றியது மகிழ்ச்சிப் படுத்தியது தமிழ் சினிமா. அற்புதம். ஆனால் எங்கள் கண் முன்னே அது தன்னிலை மறந்து தனக்கே உரிய தரத்தை முற்றிலும் இழந்து விடுமோ ! என்பதுதான் எங்களின் ஆதங்கம். விட்டிலி பூச்சிகளாய் வாழாமல் அன்னப்பறவையாய் வாழ வேண்டும் என்பதை தெரிந்தும் பலர் வாழ மறுக்கின்றனர். காரணம் நாளை என்று நம்பிக்கை இல்லாத அவர்களின் வாழ்க்கை. தற்காலிகமான அற்ப இன்பங்கள் நிரந்தரமான இன்பத்தை கெடுத்து விடுவதால்தான் நிரந்தரமான வாழ்க்கையும் பலருக்கு நிலையில்லாத வாழ்க்கையாக தெரிகிறது. ஓரறிவு மலரும் ஒருநாளில் வாழ்ந்தாலும் மணம் வீசித்தான் வாழ்ந்து முடிக்கிறது. அது மற்றவர்கள் தன்னை புகழ வேண்டும் என்பதற்காக மணம் வீசவில்லை. அது தன் கடமையை சரிவர செய்து முடிக்கிறது.
இதுபோன்ற பாடல்களை இனியும் எழுத வேண்டாம்.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # p.shankarguru 2012-01-15 12:54
tamilan munneruvathai yaarukum porukathey.. ithu avarthu thanipatta urimai..english padagalai paarthu aagaa.. oogoo enbaargal.. oru tamilan oru paadal eluthi paaratu petraal naame avarai ethirpathu tamilanuku alagu alla
பதில் | Reply with quote | Quote
 
 
0 # risath 2012-01-15 20:15
engata pothu namma india...
பதில் | Reply with quote | Quote
 
 
+1 # naanban 2012-01-18 00:06
We must proud tat our tamil actor getting recognizance world wide.... First practice to appreciate others work as v r nt doing anything... He is de national award winner last year.. may b tat is also one among de reason to invite for dinner

Read more about ஒய் திஸ் சினிமாவெறி பிரதமரே?! at www.inneram.com
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Sathyam 2012-01-28 12:58
சினிமா நடிகர்கள் காசுக்காக நாட்டை காப்பதுபோல் நடிகின்றர்கள், ஒரு நாளைக்கு ஒரு பெண்ணை கட்டிபிடித்து நடிகின்றர்கள், நடிகைகள் விபசார வழக்குகளில் சிக்குகிறார்கள், பெரும்பாலான நடிகர்கள் ஒழுக்கமற்ற வழக்கை வாழ்கிறார்கள், இவர்கள் இந்த நாட்டில் புனிதமானவர்கள் ,இவர்களுக்காக கோவில் கட்டுகிறார்கள், நாட்டின் உயர்ந்த விருதுகளை கொடுக்கிறார்கள். இப்படி சீகுபிடித்த சிந்தனை உள்ள தலைவர்கள் நாடு எப்படி முன்னேறும்.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # Shabeel 2012-01-30 13:08
Nalla Karuthu...
பதில் | Reply with quote | Quote
 
 
-1 # Jaffer 2012-02-03 01:39
மக்களை ஏமாற்றி காசு சம்பாரிக்கும் இந்த நடிகர்கள் கோடி கோடியாக சம்பளம்: கேவலம், ஆபாசம்,விபசாரம், திருட்டு,கொலை இவைகளை கற்று கொடுக்கும் நடிகர்களுக்கு ஏன் இந்த விருதுகளும், பாரட்டுகாளும் பிராதமர் சாப்பாடு இல்லாமல் தவிக்கும் எதனோயூ ஏழைகளுக்கு விருந்து கொடுத்து இருக்கலாம். நன்றி சகோதரி பானு உங்களை அழுத்தமான கருத்துகளுக்கு.
பதில் | Reply with quote | Quote
 
 
0 # siva 2012-02-03 01:43
இவனெல்லம் ஒரு பிரதமர், து தெரி நாயெ, 2ஜி, லோக்பால்,
கூடன்குலம், மின்சாரம், கஷ்மீர், சீனா, பாக்கிச்தான், இலஙகை, 20 வருடமாக இந்தியாவுக்காக விலையாடும் சச்சின் பாரதரத்னா,----------- ? இப்படி கிருக்கு பிடித்த சிந்தனை உள்ள தலைவர்கள் நாடு எப்படி முன்னேறும்.
ஒய் திஸ் சினிமாவெறி பிரதமரே?!
பதில் | Reply with quote | Quote
 
 
0 # mohamed saleem 2012-02-10 00:10
where our country is going!!! he dosent no what is doing?
பதில் | Reply with quote | Quote
 
 
0 # ZAKIR-DAMMAM-KSA 2012-02-15 14:15
NAMA TAX KATTUVADA EVARGAL விருந்தளிகதன்
பதில் | Reply with quote | Quote
 
 
0 # anwerdeen 2012-02-16 10:18
இந்த பாட்டு நாட்டிலுள்ள குறைய தீர்க்க போவதில்லை, இப்ப நாட்டிற்கு எது தேவையோ அதை செய்யுங்கள்
பதில் | Reply with quote | Quote
 

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: