பாஜகவின் கீழ்த்தர அரசியல் மாதிரி! Featured

Saturday, 26 March 2016 16:20 Written by  இந்நேரம் Published in அரசியல் Read 2074 times

கேரள மாநில திருவனந்தபுரம் தொகுதியில் இந்திய பிசிசிஐ அணி வீரரும் மேட்ச் ஃபிக்ஸிங் வழக்கில் சிக்கி உலக அரங்கில் இந்திய மானத்தைக் கப்பலேற்றியவருமான ஸ்ரீசாந்தினை பாரதீய ஜனதா கட்சி தம் வேட்பாளராக அறிவித்துள்ளது. இதற்காக இம்மீடியேட் மெம்பர்ஷிப் ஃபார்ம் கொடுத்து பாஜகவில் அவரை இணைத்துள்ளது.

அதிகாரத்தைப் பிடிக்க அதிக இரத்தம் சிந்தாமல், அதிக உயிரிழப்பு, பொருள் இழப்பு ஆகாமல் தந்திரமாக செயல்படுவதைச் சாணக்கியத்தனம் என்பதுண்டு.

இந்திய வரலாற்றில், சந்திரகுப்த மௌரியன் தலைமையில் விரிவானதொரு சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் காட்டிய கௌடில்யரின்(சாணக்கியர்) நிஜமான வரலாறு இங்கே எத்தனை பேருக்குத் தெரியும் எனத் தெரியவில்லை.

சாணக்கியரின் அரசியல் தந்திரங்களுக்கு என சில அடிப்படை கொள்கைகள் இருந்தன.

அதற்கு நேர்மாறான, கொலைகாரர்கள், கொள்ளைகாரர்கள், கிரிமினல்கள், கிரிமினல் வழக்குகளில் சிக்கி பிரபலமானவர்கள் என சுயநல கொள்ளைக்காரர்களையே தேர்வு செய்து முன்னிறுத்தும் இன்றைய அரசியல் அணுகுமுறைகளையெல்லாம் "சாணயக்கியத்துவத்துடன்" ஒப்பிடுவது அந்தச் சாணக்கியன் பெயருக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே வெட்கக்கேடு!

எனில், 2000 க்கு மேற்பட்ட அப்பாவிகளைக் கொன்றொழித்த குஜராத் இன அழிப்பு, உத்தர பிரதேச முஸஃப்பர் நகர் கலவரம் முதலானவைகளையும் மோடியின் அரசியல் சாணக்கியத்துவமாக ஏற்றுக்கொள்ள வேண்டிவரும்!

இந்திய தேசியத்தை முன் வைத்து கீழ்த்தர அரசியல் செய்யும் பாரதீய ஜனதாவின் தந்திரங்களெல்லாம் இவ்வகையிலான கீழ்த்தரச் தந்திரங்களே!

ஒருவேளை, பிரபலம் என்ற வகையில் இம்முறை திருவனந்தபுரம் தொகுதி பாரதீய ஜனதா கட்சிக்குக் கிடைக்கலாம்.

நேர்மறையான வகையிலோ அல்லது எதிர்மறையான வகையிலோ ஊடகங்கள் மூலம் மக்களிடையே பிரபலமடைந்திருக்க வேண்டுமென்பது மட்டுமே சீட் கிடைப்பதற்கான முதல் தகுதியாக புதிய அர்த்தசாஸ்திரம் இயற்றுகிறது பாரதீய ஜனதா!

சாணக்கியர் வகுத்த அர்த்தசாஸ்திரத்துக்கு எதிரானது என்பதால், ஆர்.எஸ்.எஸ் கூறும் இந்திய தேச கலாச்சாரத்துக்கும் இது எதிரானது என்பதை பாரதீய ஜனதா கட்சி தொண்டர்கள் உணரட்டுமாக!

தவறான அரசியல்பாதைகளை வகுப்பது இந்தியாவை அழிவுப்பாதைக்கே இட்டுச்செல்லும். பாரதீய ஜனதா கட்சி இந்தியாவை அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்வதில் முன்னோடியாக செயல்படுகிறது.

உணர்வோம்; விழிப்புணர்வுடன் செயலாற்றுவோம்!

- அபூ சுமையா

Last modified on Saturday, 26 March 2016 16:37
Comments   
0 #1 Zafar Rahmani 2016-03-27 08:36
திரை,சின்னத்திரை, விளையாட்டு, குற்றங்கள் போன்ற விஷயங்களில் சிறப்பு பெற்று விளங்கும் ஆளுமைகளை வைத்து அரசியல் செய்வதில் பாஜகவினரை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது.
கிரிமினல்கள் கூடாரம் ஆகாமல் இருக்க இறைவன் அருள் பாலிப்பானாக.
Quote
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.