முதுகுளத்தூரில் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி போட்டி! Featured

Thursday, 21 April 2016 15:35 Written by  இந்நேரம் Published in அரசியல் Read 1718 times

நடைபெற உள்ள 2016 சட்டமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சி ( சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) தமிழகத்தில் 30 தொகுதிகளிலும் ,புதுச்சேரியில் 3 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.

முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் மாவட்ட தலைவர் முஹம்மது இஸ்ஹாக் அவர்கள் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

வேட்பாளரின் வாழ்க்கை குறிப்பு

பெயர் : முகம்மது இஸ்ஹாக்
வயது:33
தந்தை:சதக்கத்துல்லா
தாய்:பாத்திமாபீவி
மனைவி:ரிஸ்வானாபாத்திமா
மகள்கள் : முஜாஹிதா,முர்சிதா
மகன் : ஹிஸ்புல்லா
தொழில் : வியாபாரம்
சமூக பணி : சுமார் 18 ஆண்டுகள்
அரசியல் பணி: 7 ஆண்டுகள்
கட்சி : சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா
கட்சிப் பதவி: இராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர்
சின்னம் : கேஸ் சிலிண்டர் (சமையல் எரிவாயு உருளை)

கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தியவர்.முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் பல ஆண்டுகாலமாக சமூக சேவைகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டவர்.

கலந்து கொண்ட போராட்டங்கள்:

1.லஞ்சம் ஊழல் இவற்றை கண்டித்தும்,ஊழல் கண்காணிப்பு ஆணையமான லோக் ஆயுக்தா அமைக்க வலியுறுத்தி போராட்டம்
2.தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி போராட்டம்
3.ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக போராட்டம்
4.கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம்
5.பஸ் கட்டணம்,மின் கட்டணம் மற்றும் இரயில் கட்டணம் விலை உயர்வை கண்டித்து போராட்டம்
6.விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம்
7.முஸ்லீம்களின் இடஒதுக்கீடுக்கான போராட்டம்
8.சிறைவாசிகளின் விடுதலைக்கான போராட்டம்
9.மணல் கொள்ளையை கண்டித்து போராட்டம்
10.கல்விக்கொள்ளையை தடுத்து நிறுத்த அரசை வலியுறுத்தி போராட்டம்
11.சாதீய மற்றும் மதவாத படுகொலைகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி போராட்டம்
12.மீனவர்களின் நலனுக்காகவும்,இலங்கை அரசை கண்டித்தும்,கச்சத்தீவை மீட்டிடவும் போராட்டம்

சேவைகள்:

1.ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவியை பெற்றுத்தந்தவர்.
2.அவசர மருத்துவ உதவி மற்றும் ஏழைப்பெண்களுக்கு திருமண உதவி பெற்றுத்தந்தவர்
3.ஏழைப்பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி மையம் அமைத்துக்கொடுத்தவர்
4.வரதட்சனையை ஒழிக்க மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்
5.சீமைக்கருவேல மரங்களை அழித்து நீராதாரத்தை பாதுகாக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்.
6.டெங்கு காய்ச்சல் இத்தொகுதியில் தீவிரமாக பரவிய போது தொகுதி முழுவதும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி இலவசமாக நிலவேம்பு கசாயம் வழங்கியவர்.
7.அவசர இரத்த தேவைகளுக்கு இரத்த தான சேவை புரிந்தவர்
8.இலவச கண்பரிசோதனை முகாம் உள்ளிட்ட மருத்துவ முகாம்களை முன்னின்று நடத்தியவர்
9.வெளிநாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்களுக்கு உதவுகின்ற பணிகளிலும்,வெளிநாடுகளில் மரணித்த தமிழகத்தை சார்ந்தவர்களை தாயகம் கொண்டு வருகின்ற பணிகளிலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர்
10.சென்னையில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்களையும்,நிவாரண நிதியையும் சேகரித்து அனுப்பி உதவியவர்

இவ்வாறு பல ஆண்டுகளாக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகின்ற எஸ்.டி.பி.ஐ கட்சியின் இராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர் முஹம்மது இஸ்ஹாக் அவர்கள் முதுகுளத்தூர் தொகுதியின் வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.அவருக்கான சின்னம் கேஸ் சிலிண்டர் (சமையல் எரிவாயு உருளை) என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இப்படிக்கு
பி.எஸ்.ஐ.கனி
மாவட்ட செயலாளர்
இராமநாதபுரம் மேற்கு மாவட்டம்
தொடர்புக்கு : 9655809510

 

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.