மோடி அரசின் மூடத்தனமான முடிவு! Featured

பி. ஜே. பி. அரசாங்கத்தின் மற்றுமொரு கரும்புள்ளி.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட்டதன் பிண்ணனியில் உள்ள உண்மையை அறிந்து கொள்ள தயவு செய்து முழுமையாகப் படிக்கவும்

மற்றுமொரு குறுகிய கால தேர்தல் ஆதாயம் பி. ஜே. பி. க்கும் நீண்ட கால பொருளாதார வீழ்ச்சி நமது தேசத்துக்கும்..!!

கருப்புப் பணத்தில் 90 சதவீதம் *பங்குச் சந்தையிலும், தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட்டிலுமாகத்தான்* புகுந்து கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளத் தவறி விட்டது இந்த பி. ஜே. பி. அரசாங்கம். வெறும் 10 சதவீதம் மட்டும்தான் நடுத்தர வர்க்க குறைந்த முதலீட்டாளர்களிடம் இருக்கிறது.

பெரும் பங்குதாரர்களுக்கு தன் பணத்தை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்பதும், ரிசர்வ் வங்கியின் கொள்கைகளை எப்படிக் கையாள்வது என்பதும் நன்றாகவே தெரியும்.

எனவே மோடியின் தற்போதைய திட்டமென்பது டாலரிலும் பவுண்டிலுமாக வர்த்தகம் செய்யும் பெரும் பெரும் திமிங்கிலங்களைக் காப்பாற்றவும், சின்னச் சின்ன மீன்களை வேட்டையாடவும்தான் பயன்படப் போகிறது.

ஏன் மோடி வெளிநாடுகளில் குவிந்து கிடக்கும் கருப்புப் பணத்தின் மீது எந்த அதிரடி திட்டத்தையும் அறிமுகப்படுத்தவில்லை? ஏனென்றால் அந்தப் பணம்தான் அவருக்கு எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிட உதவி செய்யப் போகிறது.

நான் ஒத்துக் கொள்கிறேன் இது தற்போது சந்தையில் புழங்கிக் கொண்டிருக்கும் குறைந்த அளவிலான கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தும் என்பதை. ஆனால் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு வந்த பிறகு இது எந்த அளவுக்கு கருப்பு பணத்தை உருவாக்கப் போகிறது என்பதை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?

கடந்த காலங்களில் நமது ராக்கெட் தொழில்நுட்பமே பாதுகாக்கப்படாமல் வெளியே கசிந்தபோது, புதிதாக அறிமுகப்படுத்தப்படும் கரன்சி நோட்டுக்களின் பாதுகாப்பு ரகசியங்கள் கசியாதா என்ன? என்ன உத்தரவாதம்?

வங்கிகள் நாளை இயங்காது, ATM கள் இரண்டு நாளைக்கு செயல்படாது, 2000 ரூபாய் மட்டும்தான் ATM லிருந்து எடுக்க முடியும், 4000 ரூபாய்தான் வங்கியில் மாற்றிக் கொள்ள முடியும், இதெல்லாம் என்ன காமெடி மோடிஜி?

வரக்கூடிய நாட்களில் அத்தியாவசிய சேவைகளில் ஏற்படப் போகும் அசௌகரியங்களை எண்ணிப் பார்க்கக் கூடவா மோடிஜி யால் முடியாது?

பாதிக்கப்படப் போகும் குடிமக்களின் உணர்வுபூர்வமான கொந்தளிப்புகள் தேசம் முழுக்கப் பரவும்போது அது மிகப் பெரும் பாதிப்பை ஆளும் பி. ஜே. பி. அரசாங்கத்துக்கும் அதன் கொள்கைகளுக்கும் ஏற்படுத்தும்.

கருப்புப் பணத்தை விடுங்கள்; ஆனால் இந்த சூழ்நிலை பின்வரும் விவாதிக்கத்தக்க விஷயங்கள் அனைத்தையும் என்கவுண்டர் செய்து விடும்

போபால் முஸ்லிம் இளைஞர்களுக்கெதிரான போலி என்கவுண்டர்,*

 JNU மாணவர் நஜீப் காணாமல் போன விவகாரம்,*

பொது சிவில் சட்டத்துக்கெதிரான நாடு தழுவிய கொந்தளிப்பு,*

NDTV மீதான தடை,

தொடர்ந்து கொண்டிருக்கும் பாகிஸ்தானின் போர் நிறுத்த மீறல்கள்,*

சப்தமின்றி நீக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நமது நாட்டின் முகலாய வரலாற்றுச் சின்னங்கள்,*

மாட்டிறைச்சி விவகாரம் மற்றும் அதிவேகமாக கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் நமது ஜனநாயகம்,*

தனியார் மயமாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி,*

நாடு முழுக்க பரவிக் கிடக்கும் இனவாதப் பதட்டம்* அடுத்த இரண்டு மாதங்களுக்கு.

-தமிழில் : அபூ ஆதில்

Another black hole of the BJP Govt..!! Please read to understand the real logic behind the banning of ₹500 & ₹1000 currency notes

Last modified on Wednesday, 09 November 2016 19:00