சுனாமி நினைவு தினம் அனுசரித்தால் மட்டும் போதுமா? Featured

Monday, 26 December 2016 13:39 Published in வாசகர்

ன்றைய தினம் இன்னும் என் மனதில் ஆழ்ந்து கிடக்கும் வடு.

சவூதி அரேபியாவில் தமிழர்கள் யாரும் இல்லாத ஒரு பகுதியில் பணிபுரிந்துகொண்டு இருந்தேன்,.

டிசம்பர் 26 2004 ஆம் ஆண்டு சுமார் காலை 09:30 மணி இருக்கும் என் அண்டைய மாநிலத்தைச் சேர்ந்த நண்பன் மூச்சிறைக்க ஓடி வந்தான்.. என்னிடம் " நீ தமிழ் நாடுதானே?" என்றான்.

"ஆமாம்"

"உன் மாநிலமே அழிந்து விட்டது.. டி.வியில் ஃப்ளாஷ் நியூஸ் ஓடுகிறது" என்றான்

என் இதயம் நின்று போனது..

எந்த டி.வி? என்றேன்

(அப்போது சன் டி.வி உள்ளிட்ட தமிழ் டி.விக்கள் என் ரூமில் வராது.. ஆங்கில சேனல்களான பிபிசி, சி.என்.என் மட்டுமே அப்போதைய நியூஸ் சேனல், என கையில் மொபைல் போனும் இல்லை)

விறு விறுவென அருகில் இருந்த தொலைபேசி கட்டண கேபினுக்கு சென்று என் வீட்டுக்கு அழைத்தேன்.. ஏதோ இரைச்சல் சத்தம் வந்ததே தவிர ரிங் போகவில்லை.
பலமுறை அழைத்தும் இதே நிலை... கிட்டத்த்தட்ட எனக்கு என் இதயத் துடிப்பு என் காதுக்கு கேட்டது.

ஒருவழியாக ஒரு மணிநேரம் கழித்து என் அண்ணனுக்கு போன் சென்றது. விசயம் கேட்டேன்.. " நமதூரில் ஒன்றும் இல்லை ஆனால் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கிட்டதட்ட அழிந்து விட்டதாக சன் நியூஸில் செய்தி ஓடுகிறது.. சென்னை மிதக்கிறது.." என்று என்னென்னவோ சொன்னார். பின்பு நடந்தவைகளை நான் விவரிக்க வேண்டியதில்லை...

இந்­தோ­னே­ஷியா சுமத்ரா தீவில் ஏற்­பட்ட கட­லுக்­க­டி­யி­லான நில­ந­டுக்கம் சுனாமி ஆழி பேர­லை­யாக இந்தியா இலங்கை உட்­பட பல நாடு­க­ளையும் அதிரச் செய்த நிகழ்வு பல இலட்சம் மனித உயிர்­களை பறித்தும் பல்­லா­யிரம் கோடி­க­ளுக்கு பொரு­ளா­தார பேரி­ழப்பை ஏற்­ப­டுத்திய அந்த சுனாமி என்னும் ஆழிப் பேரலை பேரழிவு.

ஒரு சில நிமி­டங்­களில் ஆசியா கண்­டத்தின் 10 நாடு­களில் அவற்றை ஒட்­டி­யுள்ள தீவு­களில் மூன்று இலட்சம் வரை­யான மக்களை அழித்ததோடு உலக வரைபடத்தில் ஒரு பகுதியை காணாமல் ஆக்கிய தினம் அது.

உலகில் சுனாமி, பூகம்பம், புயல், மழை வெள்ளம், எரி­மலை வெடிப்­புக்கள் என பல நடந்து கொண்­டே­யி­ருக்­கின்­றன. கடந்த 100 வரு­டங்­களில் மிகவும் மனித இனத்தை பாதித்த சம்­ப­வங்­க­ளாக 1923-ஆம் ஆண்டு ஜப்­பானில் ஏற்­பட்ட பூகம்­பத்தில் ஒரு இலட்­சத்து நாற்­ப­தா­யிரம் பேர் இறந்­தனர். 1935 இல் இந்­தி­யாவின் குவெட்­டாவில் 50,000 பேரும், 1939ல் சிலியில் 28,000 பேரும், அதே ஆண்டு துருக்­கியில் 33,000 பேரும், 1960இல் மொரோக்­காவில் 12,000 பேரும், 1976 இல் சீனாவில் இரண்டு இலட்­சத்து நாற்­ப­தா­யிரம் பேரும், அதே ஆண்டு கௌத­மா­லாவில் 23,000 பேரும், 1978 இல் ஈரானில் 25,000 பேரும், 1985இல் மெக்­ஸிக்­கோவில் 9,500 பேரும், 1988இல் ஆர்­மீ­னி­யாவில் 25,000 பேரும், 1990இல் ஈரானில் 50,000 பேரும், 1993இல் இந்­தி­யாவின் லட்­டூரில் 10,000 பேரும், 1995இல் ஜப்­பானில் 6,000 பேரும், 1998இல் ஆப்­கா­னிஸ்தான் மற்றும் தாஜிஸ்­தானில் 5,000 பேரும், 1999 இல் துருக் கியில் 17,000 பேரும், 2001இல் குஜ­ராத்தில் 13,000 பேரும், 2003இல் ஈரானில் 41,000 பேரும் பூகம்­பத்தால் உயிரிழந்துள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. இவை பேர­ழிவு ஏற்­ப­டுத்­திய பூகம்­பங்­களின் பட்­டியல்.

இவை தவிர, சில ஆயி­ரக்­க­ணக்கில் பலி கொண்ட பூகம்­பங்­களும் உண்டு. இவை மனித இனத்தை பெரிதும் பாதித்­தாலும் மிருக இனங்கள் பெரிதும் தப்­பி­க்கொள்­வ­தாக ஆய்­வுகள் சுட்­டி­க்காட்­டு­கின்­றன. இவை அனைத்தும் மனி­தனை தூய்­மைப்­ப­டுத்­தவும், சிந்­திக்­கவும் வைத்­தது.

கி.மு. 426 கிரேக்க வர­லாற்­றா­சி­ரியர் தியு­சிடைட்ஸ், சுனாமி ஏற்­ப­டு­வ­தற்­கான கார­ணங்­களை 'பிலோப்­போ­னே­சியப் போர் வர­லாறு' என்ற புத்­த­கத்தில் கூறி­யுள்ளார். அவர் தான் முதன் முதலில் கடலில் நில­ந­டுக்கம் ஏற்­பட்­டது என்றும், எந்த இடத்தில் நில நடுக்கம் கடலில் உண்­டா­னதோ அங்கு கடல் உள்­வாங்கும். பின்பு திடீர் பின்­வாங்­கு­தலும், மறு இரட்டை சக்­தியும் கொண்ட வெள்ளப் பெருக்கு ஏற்­ப­டு­கி­றது. நில­ந­டுக்கம் ஏற்­ப­டாமல் இப்­படி ஒரு விபத்து ஏற்­பட வாய்ப்பே இல்லை என ­அ­வர் ­கு­றிப்­பிட்­டுள்ளார். கி.பி. 365 இல் அலெக்­சாந்­தி­ரி­யாவில் மிகப் பெரிய அழி­வுக்­குப்பின் ரோமன் வர­லாற்­றா­சி­ரியர் அம்­மி­யனஸ் மாசில்­லினுஸ் சுனாமி என்­பது, நில நடுக்­கத்தில் தொடங்கி கடல் நீர் பின்­ன­டைவு, அதைத் தொடர்ந்­து ­இ­ராட்­சத அலை என்ற தொடர்ச்­சி­யான நிகழ்­வாக அமை­கி­றது என்றார். அதா­வது, நில­ந­டுக்கம் என்­பது நிலப்­ப­கு­தியில் கடல் பகு­தியில், மலைப்­ப­கு­தியில் ஏற்­படும். நிலப்­ப­கு­தியில் வந்தால் நிலத்தில் உள்­ளவை அதிர்ந்து சேத­மா­கி­றது. கடலில் வந்தால் கடலின் ஆழ­மான பகு­தி­யி­லுள்ள நிலத்­தட்­டுக்­களின் அசைவு பெரிய அலை­களை உரு­வாக்­கு­கின்­றது. மலையில் எரி­ம­லை­யாக உரு­வெ­டு­கி­ன்றது. பல ­இ­லட்சம் ஆண்­டு­க­ளுக்கு முன்பு ஒரே நிலத்­தட்­டுத்தான் இருந்­தது. அதன் மீது தான் பூமி இருந்­தது. ஆனால் கண்­டங்­க­ளாகப் பிரியப் பிரி­ய ­அதன் தட்­டு ­வெப்ப இயற்கை சூழ்­நி­லை­க­ளுக்கு ஏற்ப, பல்­வேறு நிலத்­தட்­டுக்கள் உரு­வா­கின. இந்தத் தட்­டுக்­க­ளின்­மீ­துதான் ஒவ்­வொரு கண்­டமும் இருக்­கின்­றன. நிலம், கடல் எல்­லா­வற்­றையும் தாங்கி நிற்­பது இந்த நிலத்­தட்­டுக்கள் தான். இதைத் தான் 'டெக்­டானிக் பிளேட்கள்' என்று புவி­யியல் நிபு­ணர்கள் கூறு­கின்­றனர்.

ஆராய்ச்­சி­யா­ளர்கள் கூற்­றுப்­படி, கி.மு. 365 ஆம் ஆண்­டு ­ஜூலை 21 ஆம் தேதி கிழக்கு மத்­திய தரைக்­க­ட­லில் ­இவ்­வா­று ­தோன்றி, எகிப்தில் அலெக்­சாண்­டி­ரி­யாவில் பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

கடல் படு­க்கையில் திடீ­ரென ஏற்­படும் மாற்­றத்தால் மேலி­ருக்கும் தண்ணீர் செங்­குத்­தாக இட­மாற்றம் அடை­வதால் சுனாமி உரு­வாகும். டெக்­டானிக் நில­ந­டுக்­கங்கள், பூமியின் புவி ஓடு உருக்­கு­லை­வதால் உண்­டாகும். இது கட­லுக்கு அடியில் ஏற்­படும் போது சிதைக்­கப்­பட்ட பகு­தி­யி­லுள்ள தண்ணீர், சம­நி­லையில் இருந்து இடம் பெயர்­கி­றது. டெக்கான் தட்­டு­களின் தவ­றான சுழற்சி கார­ண­மாக, செங்­குத்­தாக நீர் இடப்­பெ­யர்ச்சி செய்­யப்­ப­டு­கி­றது. இயக்­கத்தில் ஏற்­படும் சாதா­ரண தவ­று­க­ளாலும் கடல் படு­க்கையில் இடப்­பெ­யர்ச்சி ஏற்­படும். ஆனாலும் இவை பெரிய சுனா­மியை உண்­டாக்­கு­வது இல்லை. சுனா­மிகள் ஒரு சிறிய அலை வீச்சும், மிக நீண்ட அலை நீளமும் உடை­யவை சாதா­ரண கடல் அலை 30 அல்­லது 40 மீற்றர் அலை­நீளம் உள்­ளவை. ஆனால் சுனாமி அலைகள் சில நூறு கிலோ மீற்றர் நீளம் உடை­யவை. இவை கடல் பரப்­பை­விட 300 மில்லி மீற்றர் மேலே சிறிய வீக்கம் போன்று உரு­வாகும். அவை தாழ்­வான நிலை அடையும் போது மிக அதிக உய­ர­மாக மேலெ­ழு­கி­றது. சுனா­மியின் சிறிய அலை­கூட கட­லோ­ரப்­ப­கு­தியை மூழ்­க­டித்து விட முடியும்.

ஏப்ரல் 1946, அலாஸ்­காவில் அலேடன் தீவு­க­ளுக்கு அருகில் 7.8 ரிச்டர் அள­வுகள் பூகம்பம் ஏற்­பட்­டது. இதனால் 14 மீற்றர் உய­ரத்­திற்கு அலை மேலே எழுந்து ஹவாய் தீவில் உள்ள ஹிலோ என்ற இடத்­தையே அழித்து விட்­டது. பசுபிக் பெருங்­கடல் தரையில் அலாஸ்கா கீழ் நோக்கித் தள்­ளப்­பட்­டதால், உண்­டான பூகம்­பமே இதற்குக் காரணம். குறுகும் எல்­லை­களில் இருந்தும் ஸ்டாரிக்கா என்ற இடத்தில் 8,000 வரு­டங்­க­ளுக்கு முன் சுனாமி தோன்­றி­யது. கிராண்ட் பேங்க் 1929, பப்­புவா நியுகினியா 1998 (டப்பின் 2001) சுனா­மிகள் ஏற்­படக் காரணம் பூகம்­பத்தின் மூலம் உண்­டான வண்டல் கடலில் சென்று கலந்­ததால் உண்­டா­னது. ஸ்டாரிக்கா வண்டல் தோல்­விக்குச் சரி­யான காரணம் தெரி­ய­வில்லை. அதி­கப்­ப­டி­யான வண்­டல்கள், ஒரு நில­ந­டுக்கம் அல்­லது எரி­வாயு ஹைட்ரேட் வெளி­யா­னது (மீத்தேன் போன்ற வாயுக்கள்) கார­ண­மா­கவும் ஏற்­பட்­டி­ருக்­கலாம். 1960 வால்­டி­வியா பூகம்பம் (9.5 ஆறு), 1964 அலாஸ்கா பூகம்பம் (9.2 ஆறு), 2004இல் இந்­தியப் பெருங்­கடல் நில­ந­டுக்கம் மற்றும் 2011இல் தோஹூ பூகம்பம் (9.0 ஆறு) போன்­றவை சமீ­பத்தில் நிகழ்ந்த சக்தி வாய்ந்த நீள் ஊடு­ருவு பூகம்­பங்கள். ஜப்­பானில் சிறிய (4.2 ஆறு) பூகம்பம் ஏற்­பட்டு அரு­கி­லுள்ள கரை­யோரப் பகு­தி­களை ஒரு சில நிமி­டங்­களில் பாழ்­ப­டுத்­தி­யது.

1950களில் பெரும் நிலச்­ச­ரி­வுகள் மூலம் தான் பெரிய சுனா­மிகள் உண்­டா­னது என்று நம்­பப்­பட்­டது. நீருக்­க­டியில் ஏற்­படும் நிலச்­ச­ரி­வு­களால் ஏற்­படும் சுனா­மியை 'சியோ­ருக்கஸ்' என்று அழைத்­தனர். இதனால் அதிக அளவு நீர் இடப்­பெ­யர்ச்சி செய்­யப்­ப­டு­கி­றது ஏனெனில் நிலச்­ச­ரி­வினால் உண்­டாகும் கழி­வுகள் அல்­லது விரி­வாக்­கத்தால் உண்­டாகும் சக்தி திரும்­பவும் நீருக்­குள்­ளேயே செலுத்­தப்­படு­கி­றது. 1958இல் மிகப்­பெ­ரிய நிலச்­ச­ரிவு, அலாஸ்­காவின் லிடுயா விரி­குடா பகு­தியில் ஏற்­பட்­ட­போது 524 மீற்றர் உய­ரத்­திற்கு (1700 அடிக்­குமேல்) அலை ஏற்­பட்­டது.

சுனா­மிகள் இரு வழி­களில் சேதத்தை ஏற்­ப­டுத்­து­கி­றது. பெரு­ம­ளவு சக்­தி­யுள்ள பெரிய அலை (நீரலை) அதிக வேகத்தில் செல்­வ­தாலும், அலைகள் பெரிய அளவு இல்­லா­விட்­டாலும் நிலப்­ப­கு­தியை மொத்­த­மாக அழித்து, எல்லாப் பொருட்­க­ளையும் தன்­னுடன் எடுத்துச் சென்று விடு­வ­தாலும் பெரும் சேதம் ஏற்­ப­டு­கி­றது.

மிகப்­பெ­ரிய சுனா­மியைத் தவிர, நெருங்­கிய அலை­களை உடைக்க முடி­யாது. மாறாக ஒரு வேக­மாக நகரும் அலை­களின் துவாரம் போன்று தெரியும். விரி­கு­டாக்கள் மற்றும் மிகவும் ஆழ­மான நீர் ­அ­ருகில் சுனா­மிகள் உண்­டானால் அவை சுனா­மியை ஒரு படிக்கட்டு போன்றும், ஒரு செங்குத்தான அலையாகவும் மாற்றுகிறது. இதன் காரணமாகத் தான் ஜப்பானிய மொழியில் இதனை 'துறைமுக அலை' என்று கூறுவர். சில நேரங்களில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், மீன்பிடிக்கும் போது எந்த அசாதாரண அலையையும் உணராமல், கரைக்குத் திரும்பி வந்த பின் கிராமமே பெரிய கடலலையால் அழிவுற்றதைக் கண்டுள்ளனர். இது நாம் கண்ட சுனாமி பேரலையிலும் நடந்ததை சுட்டிக்காட்ட முடியும். சுனாமியின் உச்ச அலை கரையை அடையும் போது, கடல் மட்டம் தற்காலிகமாக உயரும். இதை 'ரன்' என்று குறிப்பிடப்படுகிறது. இவை கடல் மட்டத்திற்கு மேலிருந்து அளக்கப்படுகிறது. அலை உச்சிகளுக்கு இடையில் பலமடங்கு அலைகள் பலமணி நேரங்கள் தொடர்ந்து வந்தால், அதைப் பெரிய சுனாமி என்கிறோம்.

சுனாமி பேரலை தாக்கி 12 வருடங்கள் கழியும் நிலையில் சுனாமி மற்றும் இயற்கை அனர்த்தங்கள் பற்றிய அறிவினை பெற்றுக் கொள்வதோடு மட்டுமல்லாமல். ஒருவருக்கொருவர் நாடுகளுக்கிடையே போர் முழக்கங்களை உருவாக்கி பகையை ஏற்படுத்தி மக்களை பிரித்தாள நினைக்கும் அதிகார வர்க்கங்களுக்கு மத்தியில், மனிதர்கள் நாம் நமக்குள் இருப்பது மனிதம் என்பதை தொடர்ந்து போதித்தும், அதனை பின்பற்றியும் வாழ உறுதி மொழி எடுப்பதே இயற்கையின் அழிவை வென்ற மனிதர்களாய் நாம் ஜொலிக்க இயலும்.

-அன்பழகன்.

 

Last modified on Monday, 26 December 2016 13:41
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.