கேள்விக்குறியாகும் தமிழக எதிர்காலம்! Featured

Monday, 30 January 2017 16:40 Published in வாசகர்

நேற்று சென்னையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணி தமிழக எதிர் காலம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் தமிழகத்தில் பேரணி நடத்துவதற்கு RSS அனுமதி கேட்டபோது உள்ளாட்சி தேர்தல்கள் அறிவிக்கப்பட்டிருப்பதால் ஊர்வலத்திற்குப் பாதுகாப்பு வழங்க முடியாது என்று காவல்துறை அனுமதி மறுத்தது. அதுபோல், நேற்று சென்னை மெரினாவில் தடையுத்தரவு போடப்பட்டிருப்பதைச் சொல்லி அனுமதியை மறுத்திருக்க முடியும். ஆனாலும், சென்னையில் 2000 பேர் கலந்துகொண்ட ஊர்வலத்தில் 1000 போலீசாரும், சேலத்தில் 500 பேர் கலந்து கொண்ட ஊர்வலத்திற்கு 300 போலீஸாரும் பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.

மதம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு கல்வி நிறுவனங்களில் நடத்த அனுமதி இல்லை.ஆனால் சேலத்தில் ஆத்தூர், வடசென்னிமலை ஜெயபாரதி மெட்ரிகுலேசன் பள்ளியும், தம்மம்பட்டி, செந்தூரப்பட்டி சுவாமி விவேகானந்தா வித்யாலயாவும் தங்கள் மாணவர்களை அனுப்பியுள்ளன. இதற்கு பள்ளி கல்வித்துறை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?

கடந்த வாரம் தமிழகத்தில் எழுந்த மாணவர் புரட்சியை ஒடுக்கிய காவல்துறையினரின் அத்துமீறலை சட்டசபையில் நியாயப்படுத்தி பேசிய முதலமைச்சர், போராட்ட களத்தில் தீவிரவாத ஆதரவு கோஷங்கள் எழுப்பப்பட்டதாக பொய்யான தகவலைத் தெரிவித்தார். ஆனால், நேற்று ஊர்வலம் நடத்திய RSS அமைப்பினர் முழுக்க முழுக்க தீவிரவாத ஆதரவு கொண்ட அமைப்பினர் என்பதோடு தேசத்தந்தை காந்தியை RSS உறுப்பினர் நாதுராம் கோட்சே சுட்டுக் கொன்றதை நியாயப்படுத்தியும், கோட்சேவுக்கு சிலை வைத்துப் போற்றியும் வருகின்றனர் எனும்போது மாணவர் போராட்டத்தை ஒடுக்கியதற்குச் சொன்ன பொய்யான காரணத்தைவிட நியாயமான காரணங்கள் இந்த ஊர்வலத்தைத் தடைசெய்ய இருந்த போதிலும் அவ்வாறு செய்யவில்லை காவல் துறை!

ஆக, தமிழக அரசின் கையாலாகாத்தனமும், காவல்துறையின் காவி சிந்தனையும் தமிழகத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குகின்றன?

-சின்னமுத்து

Last modified on Monday, 30 January 2017 16:45
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.